நாள் - 28.08.2023 - திங்கள்
நல்ல நேரம்:
காலை 09.15 மணி முதல் காலை 10.15 மணி வரை
மாலை 04.45 மணி முதல் மாலை 05.45 மணி வரை
இராகு:
காலை 7.30 மணி முதல் காலை 09.00 மணி வரை
குளிகை:
நண்பகல் 01.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை
எமகண்டம்:
காலை 10.30 மணி முதல் காலை 12.00 மணி வரை
இன்றைய ராசிபலன்
மேஷம்
வியாபாரம் தொடர்பான கடன் உதவிகள் கிடைக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். சொந்த ஊர் தொடர்பான பயண சிந்தனைகள் மேம்படும். சமூக நிகழ்வுகளால் மனதளவில் சில மாற்றங்கள் ஏற்படும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். கௌரவ பதவிகளின் மூலம் செல்வாக்கு மேம்படும். சவாலான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். பரிவு வேண்டிய நாள்.
ரிஷபம்
வியாபாரத்தில் உள்ள நெளிவு, சுழிவுகளை புரிந்து கொள்வீர்கள். எதிலும் அறிவுப்பூர்வமாக செயல்படுவீர்கள். ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். எதிர்காலம் தொடர்பான புதிய பாதைகள் புலப்படும். ஆராய்ச்சி சார்ந்த விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். ஊக்கம் நிறைந்த நாள்.
மிதுனம்
செயல்களில் ஒருவிதமான படபடப்பு உண்டாகும். பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். போக்குவரத்துகளில் விழிப்புணர்வு வேண்டும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். தொழில்நுட்பக் கருவிகளால் விரயம் உண்டாகும். விளையாட்டு விஷயங்களில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்களால் அலைச்சல்கள் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.
கடகம்
தம்பதிகளுக்கிடையே இருந்துவந்த மனவருத்தங்கள் குறையும். விவாதங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். வர்த்தக பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
சிம்மம்
வெளிவட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். வழக்கு சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். திடீர் தனவரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். அனுபவங்களின் மூலம் சில முடிவுகளை எடுப்பீர்கள். தகவல் தொடர்பு துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். கனிவு வேண்டிய நாள்.
கன்னி
பொழுதுபோக்கு செயல்பாடுகளால் நெருக்கடியான சூழல் உண்டாகும். இலக்கியம் சார்ந்த துறைகளில் ஈடுபாடு ஏற்படும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உணர்ச்சிப்பூர்வமாக செயல்படுவதை குறைத்துக் கொள்வது நல்லது. பிள்ளைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கலை சார்ந்த துறைகளில் அனுசரித்துச் செல்லவும். தடைகள் விலகும் நாள்.
துலாம்
சக ஊழியர்களால் பொறுப்புகள் குறையும். தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். ஆசிரியர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். வீடு மற்றும் மனை வாங்குவது சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். உதவிகள் கிடைக்கும் நாள்.
விருச்சிகம்
மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகளை புரிந்து கொள்வீர்கள். இணைய வழிகளில் வருமானம் மேம்படும். புதிய தொழில்நுட்பக் கருவிகளை வாங்குவீர்கள். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். மறைமுகமான விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். செலவுகள் நிறைந்த நாள்.
தனுசு
வருமானத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். கனிவான பேச்சுக்கள் நம்பிக்கையை ஏற்படுத்தும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். அடிப்படை கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொருளாதாரத்தில் இருந்துவந்த நெருக்கடிகள் மறையும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பக்தி நிறைந்த நாள்.
மகரம்
இனம்புரியாத சில சிந்தனைகளின் மூலம் குழப்பம் உண்டாகும். புதுவிதமான செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து செயல்படுவீர்கள். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்துக் கொள்வீர்கள். முன்கோபமின்றி பொறுமையுடன் செயல்படவும். எதிர்காலம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உயர்வு நிறைந்த நாள்.
கும்பம்
மறுசுழற்சி சார்ந்த பொருட்களின் மூலம் விரயம் ஏற்படும். புதிய விஷயங்களை கண்டுபிடிப்பீர்கள். எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். ரகசியமான சில முதலீடுகள் அதிகரிக்கும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். காப்பக பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். முயற்சிகள் மேம்படும் நாள்.
மீனம்
கால்நடை வளர்ப்பு துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். மனதில் எண்ணியிருந்த காரியங்கள் கைகூடும். வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். பாசம் நிறைந்த நாள்.