உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 52 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் நிகத் ஸரீன் பங்கேற்றார். இவர் 52 கிலோ எடைப்பிரிவில் இவர் இறுதி போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் இவர் தாய்லாந்து வீராங்கனை ஜிட்பாங் ஜூட்மஸை  எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியை நிகத் ஸரீன் 5-0 என்ற கணக்கில்  வீழ்த்தினார். அத்துடன் தங்க பதக்கத்தை வென்றார். 


 






இதன்மூலம் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் மேரி கோமிற்கு பிறகு தங்கம் வென்ற இந்திய வீராங்கனை என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். அத்துடன் உலக குத்துச்சண்டை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற 5ஆவது இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார். உலக குத்துச்சண்டை போட்டியில் சாம்பயன் பட்டத்தை வென்ற நிகத் ஸரீனிற்கு பலரும் தங்களுடைய வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர். 


 






தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த நிகத் ஸரீன் தன்னுடைய 13 வயதில் குத்துச்சண்டை விளையாட்டில் நுழைந்தார். 6 மாதங்களில் இவர் தன்னுடைய முதல் வெற்றியை பெற்றார். அதன்பின்னர் அவர் தீவிரமாக பயிற்சி செய்தார். ஜூனியர் பிரிவில் அசத்தி பின்னர் சீனியர் பிரிவில் களமிறங்கினார். தற்போது அவர் 52 கிலோ எடைப்பிரிவில் உலக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளார். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண