ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் விளையாடும் செரினா வில்லியம்ஸ். 24வது முறை விம்பிள்டன் பதக்கத்தினை வெல்வாரா என ரசிகர்கள் ஆவலுடம் எதிர்பார்த்துக் கொண்டு உள்ளனர். இந்நிலையில், நேற்று தொடங்கிய இந்த போட்டியின் முதல் ஆட்டத்தில், உலக அலவில் 113 இடத்தில் இருக்கும் பிரெஞ்ச் வீரர் ஹர்மானி டானை எதிர்கொண்டார். அந்த ஆட்டத்தில் செரினா வில்லியம்ஸ் தனது கன்னத்தில் கருப்பு நிற ஸ்டிக்கரினை ஒட்டிக்கொண்டு களமிறங்கினார். இந்த ஸ்டிக்கருக்கான காரணம் குறித்து அனைவரும் கேள்வி எழுப்பிக்கொண்டு இருந்த வேளையில் தற்போது அதற்கான பதில் கிடைத்துள்ளது. 


 கருப்பு ஸ்டிக்கருக்கான காரணம்


மிக நீண்ட நாட்களாக செரினா வில்லியம்ஸ்  சைனஸ் பிரச்சனையினால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். இதனால் இந்த கருப்பு ஸ்டிக்கரினை தன் கன்னத்தில் அவர் ஒட்டிக்கொண்டு களத்திற்கு  வந்துள்ளார். இந்த ஸ்டிக்கர்கள் கே.டி வகை ஸ்டிக்கர்கள் எனப்படுகின்றன. இந்த ஸ்டிக்கர்கள் சைனஸ் பிரச்சனைகளை தீர்க்க உதவுவதாகவும், அதற்காகத்தான் அவர் தன் கன்னத்தில் கே.டி கருப்பு ஸ்டிக்கரினை ஒட்டியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இதற்கு முன்னர் உலகின் பல்வேறு விளையாட்டு வீரர்கள் சைனஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட ரொனால்டோ போன்ற வீரர்களும் இந்த கே.டி கருப்பு ஸ்டிக்கரினை ஒட்டிக் கொண்டு களத்தில் விளையாடி உள்ளனர். இந்த ஸ்டிக்கர்கள் சைனஸ் பிரச்சனையினை எதிர்கொள்ள உதவுவதுடன் அதிலிருந்து காத்துக் கொள்ளவும் உதவுவதாக உலக அளவில் உள்ள விளையாட்டு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.


கடந்த ஒரு வருடமாக எந்த ஒற்றையர் பிரிவு போட்டியிலும் கலந்து கொள்ளாத செரினா வில்லியம்ஸ், இந்த ஆண்டு நடக்கவுள்ள விம்பிள்டன் போட்டியில் செரினா போட்டடியில் தனது ஆட்டத்தினை தொடங்கி உள்ளார். இதுவரை 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள செரினா வில்லியம்ஸ், கடந்த ஆண்டு நடந்த  பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் 4வது சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினார். காயம் கரணமாக விம்பிள்டனில்  முதல்  சுற்றிலேயே வெளியேறினார்.  


இதன் பிறகு வேறு எந்த போட்டியிலும் செரினா பங்கேற்கவில்லை. இதனால் உலக டென்னிஸ் தரவரிசையில் 1024வது இடத்திற்கு வந்துள்ளார். அண்மையில் நடந்த ராத்ஸே சர்வதேச டென்னிஸ் போட்டியில் விளையாடினார்.  மீண்டும் தனது விளையாட்டினை தொடங்கியுள்ள  செரீனாவிற்கு சக வீரர்களும், அவரது ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண