ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் வருகிற 17-ஆம் தேதி தொடங்குகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று போட்டி அமைப்பு குழுவினரும், ஆஸ்திரேலிய அரசும் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதற்காக விமானம் மூலம் நேற்றிரவு மெல்போர்ன் விமான நிலையம் வந்த நோவாக் ஜோக்கோவிச் விசா ரத்து செய்யப்பட்டது. அவர், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததே இதற்குக் காரணம். ஏற்கெனவே பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள தங்கள் தேசத்தின் பாதுகாப்புக்காக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது. ஜோகோவிச், பிடிவாதமாக நீதிமன்றத்தை நாடியுள்ளார். மருத்துவ விலக்கு பெற்று ஆஸ்திரேலிய ஒபன் டென்னில் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்பதில் 9 முறை ஆஸி ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ஜோகோவிச் உறுதியாக உள்ளார். அவருக்கு நிகழ்ந்த சம்பவத்தை அவருடைய செர்பிய நாடு தனிப்பட்ட அவமானமாகக் கருதி ஆஸ்திரேலியாவுக்குக் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.



ஜோக்கோவிச் விசா ரத்து செய்யப்பட்டதற்கு ஜோக்கோவிச்சின் தந்தை அவமானமாகக் கருதி, தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். ஜோக்கோவிச், தனக்கு மருத்துவ விலக்கு கிடைத்தாகக் கூறி நீதிமன்றத்தை நாடியுள்ளார். ஜோகோவிச் கோவிட் தடுப்பூசி எதிர்ப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கொரோனா தடுப்பூசி போடாமலேயே எல்லா நாடுகளிலும் தங்கும் உரிமம் ஒன்று வைத்துள்ளார். ஆனால் சென்ற வாரம் அவருடைய விசா ரிஜெக்ட் செய்யபட்டபோது, கொரோனா தடுப்பூசி போடாமலேயே அனைத்து நாடுகளுக்கும் செல்வதற்கான உரிமத்தை அவர் காண்பிக்கவில்லை என்று அப்போது அதிகாரிகள் தரப்பில் காரணம் கூறப்பட்டது. அதனால் மீண்டும் ஒருமுறை அந்த உரிமத்தை வைத்து விசா விண்ணப்பித்தனர். அப்போதும் அந்நாட்டு குடியுரிமை துறை அமைச்சர் அவரது விசாவிற்கு அனுமதி வழங்க மறுத்துள்ளார். இது சம்பந்தமாக ஆஸ்திரேலிய குடியுரிமைத்துறை அமைச்சர், "இன்று நான் எனது அதிகாரத்தை பயன்படுத்தினேன். நட்சத்திர வீரர் நோவாக் ஜோகோவிட்ச்சின் விசா பொது நலன் கருதி, உடல்நலம் மற்றும் நல்-ஒழுங்கு அடிப்படையில் ரத்து செய்யப்பட்டுள்ளது" என்று அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். இதையடுத்து நோவாக் ஜோகோவிட்ச் எந்நேரத்திலும் ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேற்றப்பட்டு மீண்டும் அங்கு நுழைவதற்கு மூன்று ஆண்டுகள் வரை அவருக்கு தடை விதிக்கப்படும் வாய்ப்புள்ளது. இருப்பினும், 34 வயதான செர்பியா நாட்டை சேர்ந்த நோவாக் ஜோகோவிட்ச் சட்ட ரீதியாக இந்த பிரச்னையில் இருந்து வெளிவருவதற்கு சாத்தியம் உள்ளது.



இந்த விஷயம் பற்றி ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் தனது கருத்தினை சென்ற வாரம் தெரிவித்திருந்தார். "ஜோகோவிச்சுக்கு ஏற்பட்டிருக்கும் நிலையை நினைத்து வருந்துகிறேன். அவருக்கு இது மிகவும் கடினமாக இருக்கும். ஆனால், தடுப்பூசி செலுத்தியிருந்தால், இங்கே மட்டுமின்றி அனைத்து நாடுகளிலும் விளையாட அனுமதி கிடைக்கும். எனக்குக் கடந்த மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டது. ஆனால் நான் தடுப்பூசி செலுத்தியதால் அனுமதி கிடைத்தது. தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்பதே ஆஸ்திரேலியா அரசு கூறும் செய்தி. நடந்த சம்பவதிற்க்கு வருந்துகிறேன்"என்று தெரிவித்திருந்தார்.


தற்போது அவரிடம் ஜோக்கோவிச் இல்லாத ஆஸ்திரேலிய ஓபன் எப்படி இருக்கும், இருந்தால் எப்படி இருக்கும் என்ற கேள்வியை நடாலிடம் கேட்டபோது அதற்கு அவர், "ஜோக்கோவிச் ஒரு ஆகச்சிறந்த வீரர் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் எந்த ஒரு தனிப்பட்ட வீரரையும் விட அந்த நிகழ்வு மிகப்பெரியது. வீரர்கள் வருவார்கள், போவார்கள், டென்னிஸ் இருந்து கொண்டே இருக்கும். ஜோக்கோவிச்சோ, ஃபெடரரோ, நானோ, பியோர்ன் போர்கோ அந்தந்த நேரங்களில் விளையாட்டில் சிறந்து விளங்கியிருக்கலாம். ஆனால் எப்போவுமே சிறந்தது விளையாட்டுதான். ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் எந்த ஒரு வீரரை விடவும் முக்கியமானது. அவர் வந்து விளையாடினால் சரி, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் எப்போவுமே ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்தான். அவர் வந்தாலும் இல்லையென்றாலும். அது தான் என் பார்வை." என்றார்.


ஒன்பது முறை ஆஸ்திரேலியன் ஓபன் சாம்பியனான ஜோக்கோவிச் அடுத்த வாரம் விளையாடி வென்றால் ஆடவர் டென்னிஸ் போட்டியில் 21 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களுடன் மிகவும் வெற்றிகரமான ஆண் டென்னிஸ் வீரராக புதிய சாதனை படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.