மும்பையில், மனைவி குளித்தபோது வீடியோ பதிவு செய்து, அந்த வீடியோவை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாகப் பதிவு செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றஞ்சாட்டப்பட்ட 30 வயது நபர் மீது குரார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வரதட்சணை கேட்டு பெண்ணை துன்புறுத்தியதாக மாமியார் உட்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தனது மாமியார் ஒரு பிளாட் வாங்கி தரக்கோரி கேட்பதாக பாதிக்கப்பட்ட  பெண் புகார் கூறினார்.


குரார் கிராமத்தில் வசித்து வந்த 28 வயதான பெண் 2015 இல் பிவாண்டியைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு  இரட்டை குழந்தைகள் உள்ளனர். பெண்ணின் தந்தை திருமணத்திற்காக கிட்டத்தட்ட  12 லட்சம் ரூபாய் செலவழித்துள்ளார். மேலும், ரூபாய் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட நகைகளை கொடுத்துள்ளார். ஆனால், மாப்பிள்ளை வீட்டார் இன்னும் வரதட்சணை கேட்டும், பிளாட் கேட்டும் அவரை துன்புறுத்தி வந்துள்ளனர். தொடர் தொல்லையால் விரக்தியடைந்த பெண் இரண்டு முறை வீட்டை விட்டு வெளியேறி குராரில் தனது பெற்றோருடன் தங்கினார். மேலும் படிக்க: ”நான் லெஸ்பியன்” : தன்பாலீர்ப்பாளராக நடித்து பெண்களின் நிர்வாண ஃபோட்டோக்களை பெற்று மிரட்டல்.. சிக்கியது எப்படி?


அவர்கள் மீது குடும்ப வன்முறை வழக்கையும் அவர் பதிவு செய்தார். இருப்பினும் அவரது கணவர் வழக்கை திரும்பப் பெறும்படி அவரை வற்புறுத்தியுள்ளார்.


கடந்த ஆண்டு ஜனவரி மாதம், தானேவில் இருவரும் ஒன்றாக தங்கியிருந்தபோது, ​​அந்த பெண் குளிப்பதை அவரது கணவர் பதிவு செய்ததாகவும், சில மாதங்களுக்கு முன்பு அவர் வீட்டை விட்டு வெளியேறியபோது, ​​அவர் திரும்பி வரவில்லை என்றால் வீடியோவைப் பரப்புவதாகவும் மிரட்டியதாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




கடந்த வாரம் பாதிக்கப்பட்ட பெண்ணின் தங்கை, தனது சகோதரி கணவரின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில், சாகோதரி குளித்துக் கொண்டிருக்கும் வீடியோவைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனைத்தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் தனது குடும்ப உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து காவல்துறையினரிடம் புகார் கூறினார்.


குற்றஞ்சாட்டப்பட்ட அந்த நபர் மீது குரார் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வரதட்சணை கேட்டு பெண்ணை துன்புறுத்தியதாக  மாமியார் உட்பட 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  விசாரணை நடைபெற்று வருவதாக குரார் காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும் படிக்க: பிரேக் அப் காதலருக்கு கட்டம் கட்டிய காதலி! 30 போலி இன்ஸ்டா கணக்குகள் மூலம் மாஸ்டர் ப்ளான்!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண