விளையாட்டு வீரர்கள் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது அவர்களின் கட்டுமஸ்தான உடல். அது கிரிக்கெட், கால்பந்து வீரர்களுக்கு மட்டுமல்லாது நீச்சல் வீரர்கள் என மற்ற விளையாட்டு வீரர்களுக்கும் பொருந்தும். அவர்கள் எப்போதுமே தங்களது உடல்மீது அதிக கவனம் செலுத்துவார்கள். அதற்காக அவர்கள் போடும் உழைப்பு அபரிமிதமானது. திரைக்கு முன்பு அவர்கள் தங்களது பெஸ்ட்டை கொடுப்பதற்காக திரைக்கு பின்னால் கடுமையான உழைப்பை போடுகிறார்கள். உடற்பயிற்சி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அவ்வப்போது தங்களது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் பதிவிடுவார்கள்.


விளையாட்டு வீரர்கள் தங்களது உடலினை பாதுகாத்துக் கொள்ள பலவற்றை செய்கிறார்கள்.


மேரி கோம்



மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த குத்துச்சண்டை வீரர். இவர் ஒருமுறை 47 கிலோ எடைப்பிரிவினருக்கான குத்துச் சண்டை போட்டியில் கலந்துக் கொண்டார். அப்போது அவரது எடையை கணக்கிட்டபோது 2 கிலோ எடை கூடுதலாக இருந்தது தெரியவந்தது. போட்டிக்கு 4 மணி நேரமே இருந்த நிலையில் அதற்குள் உடற்பயிற்சியின் மூலமாக 2 கிலோ எடையை சர்வ சாதாரணமாக இழந்துள்ளார். இது பலருக்கும் மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 


உசைன் போல்ட்



2008 ஆம் ஆண்டு, ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் 3 ஒலிம்பிக் தங்கப் பதக்கங்களைப் பெற்றார். அப்போது அவரது உணவுப்பழக்கம்  பற்றி தெரியவந்தது. அதாவது 100 சிக்கன் நக்கெட்கள், பிரஞ்ச் ஃப்ரைஸ் ஆகியவற்றை எடுத்துக் கொள்வாராம். இது பல ஊட்டச்சத்து நிபுணர்களுக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 



ரொனால்டோ



கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரே நேரத்தில் 7-8 மணிநேர தூக்கத்திற்குப் பதிலாக 5, 90 நிமிடங்கள் பவர் நேப் எடுத்துக்கொள்ள அதிகம் விரும்புவாராம். அது தன்னை புத்துணர்ச்சியுடன் இயங்கச் செய்கிறது எனவும் அவர் தெரிவிக்கிறார்.


லூயிஸ் ஹாமில்டன் 



லூயிஸ் ஹாமில்டன் கார்பந்தைய வீரர். பார்முலா 1 இல் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை மிக இளம் வயதில் வென்ற வீரர் என்ற சிறப்புக்குச் சொந்தக்காரர் இவர். சில வருடங்களுக்கு முன்பாக  ‘வீகன்’ உணவு முறைக்கு மாறிவிட்டார். ஒருமுறை அவர் ஜப்பானில் பங்கேற்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்றிருந்தார். அப்போது ஹாங்காங்கில் வீகன் உணவு வகை பர்கர்கள் தயாரிக்கும் இடத்தைத் தேடி கண்டுபிடித்து அங்கிருந்துதான் தனக்கான உணவை ஆர்டர் செய்திருக்கிறார். உணவு விஷயத்தில் அவர் அவ்வளவு ஸ்ட்ரிக்ட்டாம்!



மீராபாய் சானு


 






இவரை யாராலும் எளிதில் மறந்துவிட முடியாது. 2021 டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் 49 கிலோ எடைப் பிரிவில் பாரம் தூக்குதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். மீராபாய் ஒலிம்பிக் போட்டிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக எதுவுமே சாப்பிடவில்லை என்றும், ஒலிம்பிக்கிற்கான பயிற்சியின் போது 2 வருடங்கள் அவர் வீட்டு உணவை சாப்பிடவில்லை என்றும் கூறப்படுகிறது. பதக்கம் வென்ற பிறகு, அவர் இந்தியா திரும்பியபோது முதல் முறையாக வீட்டில் உணவை சாப்பிட்டிருக்கிறார். அது குறித்து நெகிழ்ச்சியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றையும் வெளியிட்டிருந்தார். 


விராட் கோலி


 






விராட்கோலியின் ஸ்டாமினா பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடிய ஒன்று. டயட் மட்டுமல்லாது தான் அருந்தும் நீரிலும் அதிக கவனமாக இருப்பவர். அதற்காக பிரான்ஸ் நாட்டில் உற்பத்தியாகும் எவியன் மினரல் வாட்டரை இறக்குமதி செய்து பயன்படுத்துகிறார். அதன் விலை இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு லிட்டருக்கு 600 ரூபாய்.