உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு ஆண்டு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இங்கு தமிழ் மாதம் தோறும் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் மீனாட்சியம்மன் கோயிலில் மாசி திருவிழா கொடியேற்றம் இன்று நடைபெற்றது.
இதையொட்டி சாமி சன்னதி கொடிமரம் முன்பு மீனாட்சி, சுந்தரேசுவரர் சாமிகள் எழுந்தருளினார்கள். அங்கு சாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் மாசி உற்சவ திருவிழாவை முன்னிட்டு பிப்ரவரி 8ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை 10 நாட்கள் தினமும் காலை, இரவு என இரு வேளையும் மீனாட்சி, சுந்தரேசுவரர் சாமிகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு சித்திரை வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்.
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- நகர்புற உள்ளாட்சித் தேர்தல் - திருச்சியில் 2 நகராட்சி, 8 பேரூராட்சிகள் பெண்களுக்கு ஒதுக்கீடு - மாநகரில் 33 வார்டுகளில் பெண்கள் போட்டி
மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தில் 500 கோடி ஊழல் - எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் குற்றச்சாட்டு
இந்நிலையில் கொரானா தொற்று மற்றும் ஓமிக்கிரான் பரவல் காரணமாக மீனாட்சியம்மன், பிரியாவிடை, சுந்தரேஸ்வரர் சித்திரை வீதிகளில் வலம் வருவதற்கு பதிலாக கோவிலுக்குள் உள்ள ஆடி வீதிகளில் வலம் வருவர் என அறிவிக்கப்பட்டு உள்ளது. விழாவில் சட்டத்தேரில் சப்தாவர்ண சப்பரத்தில் சாமியும், அம்மனும் எழுந்தருளி சித்திரை வீதிகளை வலம் வர உள்ளனர். தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்துக்கண்ணன், கோவில் இணை கமிஷனர் செல்லத்துரை மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - pongal 2022 | நகரத்தார்கள் நடத்திய செவ்வாய் பொங்கல் விழா - 60 கிடாய்களை ஒரே இரவில் வெட்டி கோலாகலம்