சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தூண்களில் ஒருவராக இருந்தவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஷேன் வாட்சன். ஐபிஎல் போட்டிகளில் பெரிய அளவில் சாதிக்காமல் இருந்த அவருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு திருப்புமுனையாக  அமைந்தது.

வாட்சன் மீது முழுமையாக நம்பிக்கை வைத்த தோனி, வெற்றி தோல்விகளை குறித்து கவலைப்படாமல் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கினார்.

கடந்த முறை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பெரிய அளவில் ரன்குவிக்காத வாட்சன் ஒட்டு மொத்தமாக அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வுபெற்றார்.  

ஆனால் இதற்கு முந்தைய வருடங்களில் சென்னை கோப்பை வெல்வதற்கும் இறுதிப் போட்டி வரை செல்வதற்கும் வாட்சனின் ஆட்டமே முக்கிய காரணமாக இருந்தது. ஹைதராபாத் அணிக்கு எதிரான இறுதிப் போட்டி ஒன்றில் கால்களில் இரத்தம் வழிவதை பொறுத்துக் கொண்டு அவர் ஆடிய ஆட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிலையில் சென்னை அணி வெற்றி பெற  சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்து செய்தியை பகிர்ந்துள்ளார். 
 

மேலும் நான்காவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பை வெல்ல வேண்டுமெனவும் தன் விருப்பத்தை தெரிவித்து, மலரும் நினைவுகளாக தனது முந்தைய அணியுடனான போட்டோக்களையும் பகிர்ந்துள்ளார்.