இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரராகவும், ஐபிஎல் போட்டியில் மும்பை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் விளங்கும் ஹர்திக் பாண்டியா டி-20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருக்கிறார். இந்நிலையில், நேர்காணல் ஒன்றுக்கான படப்பிடிப்பில் ஹர்திக் இருந்தபோது அவரது மகன் அகஸ்தியா ‘உள்ளே’ புகுந்த வீடியோ வைரலாகி வருகின்றது. பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளது.
படப்பிடிப்பு அறைக்குள் நுழைந்துவிட்ட குழந்தை அகஸ்தியா, கேமராவை பார்த்து கைநீட்ட, ஹர்திக் அது கேமரா என சொல்லி கொடுத்து கொஞ்சி கொண்டிருந்தார். அகஸ்தியாவின் வருகையில் படப்பிடிப்பு பாதியில் நிற்க, சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் நேர்காணலை தொடர்ந்துள்ளனர்.
இந்நிலையில், அவர் அளித்த பேட்டியில், ”அதனால் தான் நான் கிரிக்கெட்டுக்கு வந்தேன். பணம் நல்ல விஷயம் தான். அது நிறைய விஷயங்களை மாற்றியமைக்கும். அதற்கு நானே நல்ல உதாரணம். கிரிக்கெட்டுக்கு வராவிட்டால் நான் பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்திருப்பேன். ஆனால் எனக்கு எப்போதுமே எனது குடும்பம் தான் முதன்மை. என் குடும்பம் நலமாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அதனால் கிரிக்கெட்டை தேர்வு செய்தேன். ஆனால், எந்தச் சூழலிலும் கிரிக்கெட்டை எதற்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன். நான் கிரிக்கெட்டில் பணம் இருக்கிறது என்று பேசவும் காரணம் இருக்கிறது.
T-20 WC: ஒரே நாளில் 6 போட்டிகள்... என்ன நடந்தது நேற்று... 6 மேட்ச்... 60 நொடிகளில் விபரம்!
கிரிக்கெட்டில் பணம் சம்பாதிக்கலாம் என்பதை வெளிப்படையாகப் பேசாவிட்டால் இளைஞர்கள் கிரிக்கெட்டை ஏன் எந்த ஒரு விளையாட்டையுமே தொழிலாக தேர்வு செய்ய மாட்டார்கள். அதனால் தான் நான் பணத்தைப் பற்றி பேசுகிறேன். என்னிடம் 2019ல் ஒருவர் பேசும்போது, இளைஞர்களுக்குப் பணம் பிரதானமாக இருக்கக் கூடாது என்று அறிவுரை சொன்னார். ஆனால் நான் அதை மறுத்தேன். ஒரு கிராமத்து இளைஞன் நகரத்துக்கு வந்து அவனுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்து சம்பாதித்தால் அவன் உடனை அந்த சம்பாத்தியத்தை பெற்றோருக்கு, உறவுகளுக்கு மடைமாற்றுவான். பணம் நல்ல மாற்றங்களைக் கொண்டுவரும்” என தெரிவித்திருந்தார்.
டி-20 உலகக்கோப்பை தொடர் போட்டிகள் அக்டோபர் 17-ம் தேதி தொடங்கியது. சூப்பர் 12 சுற்றுக்கு முன்பு, 8 அணிகளுக்கு இடையேயான தகுதிச்சுற்று போட்டிகள், சூப்பர் 12 சுற்றுக்கு தேர்ச்சி பெற்ற அணிகளுக்கு இடையான பயிற்சி ஆட்டங்கள் ஆகியவை நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில், இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி முதல் வெற்றியைப் பதிவு செய்தது. அடுத்து அக்டோபர் 20-ம் தேதி நடக்கும் பயிற்சி போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள உள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்