டி-20 உலகக்கோப்பை தொடர் போட்டிகள் அக்டோபர் 17-ம் தேதி தொடங்கியது. சூப்பர் 12 சுற்றுக்கு முன்பு, 8 அணிகளுக்கு இடையேயான தகுதிச்சுற்று போட்டிகள், சூப்பர் 12 சுற்றுக்கு தேர்ச்சி பெற்ற அணிகளுக்கு இடையான பயிற்சி ஆட்டங்கள் ஆகியவை நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 6 போட்டிகள் நடைபெற்றுள்ளது. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், தென்னாப்ரிக்கா என முக்கிய அணிகளின் போட்டிகளும், தகுதிச்சுற்று போட்டிகளும் நடைபெற்றன. அந்த 6 போட்டிகளின் முடிவுகளும், நச் ஹைலைட்ஸும்! 


1. வெஸ்ட் இண்டீஸ் vs பாகிஸ்தான்


பயிற்சி ஆட்டங்களின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியை பாகிஸ்தான் எதிர்கொண்டது. துபாய் ஐசிசி அகாடெமியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்தது. வெஸ்ட் இண்டீஸ் பேட்டர்கள் பெரிதாக சோபிக்காத நிலையில், 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்தது.  எளிதான இலக்கை சேஸ் செய்து களமிறங்கிய பாகிஸ்தானுக்கு, ஓப்பனராக பேட் செய்த கேப்டன் பாபர் அசாம் அதிரடி காட்டினார். அரை சதம் கடந்த அவரோடு, கூட்டணி சேர்ந்த ஃபக்கர் ஜமான் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க 15.3 ஓவர்களிலேயே 3 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்தது பாகிஸ்தான். இதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்றது பாகிஸ்தான். 


2. தென்னாப்ரிக்கா vs ஆப்கானிஸ்தான் 


இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் தென்னாப்ரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. அபுதாபி டாலரென்ஸ் ஓவல் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில், டாஸ் வென்ற தென்னாப்ரிக்கா அணி பேட்டிங் செய்தது. அதிகபட்சமான ஏய்டன் மார்க்கரம் 48 ரன்கள் சேர்க்க, மற்ற வீரர்கள் ஓரளவு அணியின் ஸ்கோரை உயர்த்த ரன் சேர்த்தனர். இதனால், 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது தென்னாப்ரிக்க அணி. இலக்கை சேஸ் செய்து களமிறங்கிய ஆப்கானிஸ்தானுக்கு, முதல் ஓவரிலேயே விக்கெட் சரிந்தது. அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்ததால் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்பியைத் தழுவியது. 






3. நியூசிலாந்து vs ஆஸ்திரேலியா 


மூன்றாவது பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு, மார்டின் குப்தில், டாரில் மிட்செல் நிதானமான ஓப்பனிங் தந்தனர். இந்த இரு வீரர்களும் தலா 30+ ரன்களை கடக்க, அடுத்து வந்த வில்லியம்சன், ஜேம்ஸ் நீஷமும் தலா 30+ ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோரை 20 ஓவர் முடிவில் 158 ரன்களுக்கு கொண்டு சென்றனர். சேஸிங் களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு, முதல் பந்திலேயே அதிர்ச்சி. இரண்டாவது இன்னிங்ஸின் முதல் பந்தில் வார்னர் கோல்டன் டக்-அவுட்டானார். அவரை அடுத்து களமிறங்கியவர்கள் சுதாரித்து கொண்டு ஆட, கடைசி ஓவர் வரை போட்டி பரபரப்பாக சென்றது. 1 பந்து மீதமிருக்கையில் இலக்கை எட்டிய ஆஸ்திரேலிய அணி, 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.


4. இந்தியா vs இங்கிலாந்து


நேற்றைய தினத்தின் கடைசி பயிற்சி ஆட்டம் துபாய் ஐசிசி அகாடெமியில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற கேப்டன் கோலி, ஃபீல்டிங் தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த் இங்கிலாந்து வீரர்களில் டாப் ஆர்டர் சரிய, மிடில் ஆர்டர் பேட்டர்கள் பேர்ஸ்டோ, லிவிங்ஸ்டன், மொயின் மொலி மட்டும் நிதானமாக ரன் சேர்க்க, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது இங்கிலாந்து. இலக்கை சேஸ் செய்த இந்தியாவுக்கு, கே.எல் ராகுல், இஷான் கிஷன் தந்த அதிரடி ஓப்பனிங்கால் சிறப்பான தொடக்கம் இருந்தது. இதனால் 19 ஓவர்களிலில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்து இந்த டி-20 உலக்ககோப்பையில் முதல் வெற்றியை பதிவு செய்தது.


5. நெதர்லாந்து vs ஐயர்லாந்து









அபுதாபி சையத் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய தகுதிச்சுற்று போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து பேட்டிங் செய்தது. அரை சதம் கடந்த ஓப்பனர் மேக்ஸ் ஓ டவுட்டை தவிர மற்ற பேட்டர்கள் சோபிக்கவில்லை. இதனால் 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 106 ரன்கள் மட்டுமே எடுத்தது. எளிதான இலக்கை சேஸ் செய்து களமிறங்கிய ஐயர்லாந்து அணிக்கு, ஓப்பன்ர் பால் ஸ்ட்ரிலிங் ரன் சேர்க்க, மிகவும் எதிர்ப்பாக்கப்பட்ட கெவின் ஓ ப்ரையன் ஏமாற்றினார். அடுத்து களமிறங்கிய காரத் லெலானி 40+ ரன்கள் எடுத்தார். இதனால், 15.1 ஓவர்களிலேயே போட்டியை வென்றது ஐயர்லாந்து.


6. இலங்கை vs நமிபியா 


நேற்றைய தினத்தின் இரண்டாவது மற்றும் கடைசி தகுதிச்சுற்று போட்டியில், இலங்கை, நமிபியா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் ஃபீல்டிங் செய்தது. முதலில் பேட் செய்த நம்பியா அணி, தட்டுத்தடுமாறி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து களமிறங்கிய இலங்கை அணி, எளிதாக போட்டியை வெல்லாமல் முதலில் சொதப்பியது. டாப் ஆர்டர் சொதப்ப, 3 விக்கெட்டுகளை விட்டுக்கொடுத்து நான்காவது, ஐந்தாவதாக களமிறங்கிய அவிஷ்கா ஃபெர்னாண்டோ, பனுகா ஆகியோர் ரன் சேர்த்து வெற்றியை உறுதிப்படுத்தினர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண