ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் தகுதிச்சுற்று போட்டிகள் முடிந்து, இன்று முதல் சூப்பர் 12 சுற்று போட்டிகள் நடக்க உள்ளன. ஏற்கனவே 12 அணிகள் தேர்வாகி இருந்த நிலையில், தகுதிச்சுற்று முடிவில் ஸ்காட்லாந்து, வங்கதேசம், இலங்கை, நமிபியா அணிகள் அடுத்த சுற்றுக்கு தேர்வாகி உள்ளனர். க்ரூப்:2-ல் இடம் பிடித்திருக்கும் இந்திய அணிக்கான முதல் போட்டி நாளை நடைபெற உள்ளது. 


உலக கோப்பை வரலாற்றில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்திய கிரிக்கெட் அணியை ஒருபோதும் வீழ்த்தியதே இல்லை என்பதால் இந்த போட்டி அனைவர் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், டி-20 உலகக்கோப்பை தொடர் போட்டிகளுக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு புதிய ஜெர்ஸியில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. அப்போது எடுக்கப்பட்ட ஜாலியான வீடியோவில் இந்திய அணி வீரர்கள் ஒருவருக்கொருவர் வம்பு செய்து கொண்டு மகிழ்ந்த தருணம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இந்திய மக்களை இந்திய அணிக்காக ஆதரவு அளிக்குமாறு கேட்டுகொண்டுள்ளது.


ட்விட்டர் பக்கத்தில் பிசிசிஐ வெளியிட்ட வீடியோ:






பிசிசிஐயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மற்றுமொரு வீடியோ வெளியாகியுள்ளது. இதுவும், இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வீடியோவைக் காண க்ளிக் செய்யவும்


சூப்பர் 12 சுற்றுக்கு தேர்வாகியுள்ள ஒவ்வொரு அணியும், அந்த அணி இடம் பெற்றிருக்கும் பிரிவில் உள்ள மற்ற 5 அணிகளோடு விளையாடும். இதனால், ஒவ்வொரு அணிக்கு 5 போட்டிகள் என மொத்தம் 30 போட்டிகள் நடைபெற உள்ளது.


இந்திய அணி போட்டிகள் விவரம்:


இந்தியா vs பாகிஸ்தான் ; அக்டோபர் 24, இரவு 7.30 மணி, துபாய்


இந்தியா vs நியூசிலாந்து ; அக்டோபர் 31, இரவு 7.30 மணி, துபாய்


இந்தியா vs ஆப்கானிஸ்தான் ; நவம்பர் 3, இரவு 7.30 மணி, அபு தாபி


இந்தியா vs ஸ்காட்லாந்து ; நவம்பர் 5, இரவு 7.30 மணி, துபாய்


இந்தியா vs நமிபியா ; நவம்பர் 8, இரவு 7.30 மணி,  துபாய்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண