சச்சின் டெண்டுல்கர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “கால்பந்து என் மனதில்!” என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் எந்த அளவிற்கு இருக்கிறார்களோ, அதை விட இரண்டு மடங்கு ரசிகர்கள் கால்பந்து விளையாட்டிற்கு உண்டு. கால்பந்து தொடரில் பல நாடுகளில் லீக் தொடர்கள் நடத்தப்பட்டாலும், ஃபிபா உலகக் கோப்பை என்றதும் ஒட்டுமொத்த உலக கால்பந்து ரசிகர்களும் உற்று நோக்கும் ஒரே தொடர் இந்த தொடர் மட்டும்தான். 


கத்தாரில் ஃபிபா உலகக் கோப்பை போட்டிகள் நடந்து வரும் நிலையில் கிரிக்கெட்டை நேசிக்கும் இந்தியாவுக்கு கால்பந்து ஜுரம் பிடித்துள்ளது . போட்டியில் நாடு இல்லையென்றாலும், அந்நாட்டில் உள்ள கால்பந்து ரசிகர்கள் விளையாட்டை ஆரவாரம் செய்து கொண்டாடி வருகின்றனர்.


அந்தவகையில் ஃபிபா சர்வதேச கூட்டமைப்பு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து தொடரை நடத்தி வருகிறது. தற்போது நடைபெற இருக்கும் இந்த தொடரானது கடந்த மாதம் 20ம் தேதி தொடங்கி தற்போது அரையிறுதி சுற்றை நெருங்கியுள்ளது. 


இந்தநிலையில், முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கர், FIFA உலகக் கோப்பை 2022 க்கான தீம் பாடல் பின்னணியில் இசையை பதிவிட்டு, அதில், தான் கால்பந்து விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “கால்பந்து என் மனதில் உள்ளது!” என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.






அந்த வீடியோவில், சச்சின் டெண்டுல்கர் நீல நிற டி-சர்ட், நீல நிற ஷார்ட்ஸ் அணிந்து, திரும்பி ஓடுவதும், பந்தைத் தடுத்ததும், தனது தந்திரங்களையும் திறமைகளையும் காட்டுவதும் காணப்பட்டது. டெண்டுல்கர் வெள்ளிக்கிழமை இரவு வீடியோவை வெளியிட்டார். அதன்பிறகு, பல லட்சம் லைக்ஸ்களை பெற்று, ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. 






முன்னதாக, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கோல்ஃப் உடையில் மைதானத்தின் மத்தியில் கோல்ஃப் கிளப்பை வைத்திருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளார்.