சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர். இவர் இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதித்துள்ளார். பெடரர் இருக்கும் களம் பரபரப்புடன் இருக்கும். தனது அதிரடி திறமையால் மக்களின் மனங்களை கவர்ந்தவர். காயம் காரணமாக இவர் சமீபத்தில் நடந்து முடிந்த பிரஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பங்கேற்கவில்லை. ரோஜர் பெடரர் எப்போது ட்21-வது கிட்ராண்ட்ஸ்லாம் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றெடுப்பார் என்று ரசிர்கர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்நிலையில், ரோஜர் பெடரர் ரசிகர் ஒருவரிடம் பேசும் வீடீயோ இணையத்தில் ரசிர்களால் பகிரப்பட்டும், மகிழ்ச்சியான கமெண்ட்களும் குவிந்து வருகிறது. ரசிகர் ஒருவர் வெளியிட்டுள்ள விடீயோவில், ரசிகர் ஒரு உணவகத்தில் எதேர்ச்சையாக ரோஜர் பெடரைச் சந்தித்தார். மகிழ்ச்சியில், தனக்கு கிடைத்த வாய்ப்பில், ஆதர்சன நாயகனை பார்த்த குஷியில், அவர் இருந்த இடத்தில் இருந்தபடியே, “ உங்களை என் கையில் டாட்டூவாக வரைந்துள்ளேன்.” என்றார். அங்கிருந்த அனைவரும் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். ரசிகர் பெடரிடம் சென்று தன் கையில் உள்ள டாட்டூவைக் காட்டினார்.
அதைக் கண்டு பெடரர் மகிழ்ச்சியானார். ரசிகர் தன் கையில், டென்னிஸ் ஆடுகளத்தின் மைதானத்தை டாட்டூவாக வரைந்திருந்தார். அதன் மூலம், டென்னிஸ் என்றால் என்றும் ரோஜர் பெடரர் என்பதே வரலாறு என்பதை சொல்லும் நோக்கில் இருந்தது அவரது பதில்.
ஆம், டென்னில் வரலாற்றில் பெடரருக்கான இடம் என்பது மிகப்பெரிது. தன் அசாதாரண திறமையாலும், டென்னிஸ் மைதானத்தில் பல்வேறு காயங்கள் ஏற்பட்ட போதும், அதிலிருந்து மீண்டு 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வீடியோவை ரோஜர் பெடரர் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும், ரசிகர் Vinicius Carmona Cardoso, தனது டிவிட்டர் பக்கத்தில் “ நான் இந்த டாட்டூவை வரையும்போது, உங்களை ஒரு நாள் சந்திப்பேன் என்று நினைத்தேன். என் கனவு நிஜமான நாள் இன்று! என் வாழ்வில் மறக்கமுடியாதது..” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்