இந்தியா ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற டெஸ்ட் தொடரின் போது முதல் முறையாக வாஷிங்டன் சுந்தர் டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கினார், அங்கு சிறப்பாக விளையாடிய அவருக்கு இந்தியாவில் இங்கிலாந்துடன் நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் வாய்ப்புகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா இவர்கள் இருவருக்கும் அடுத்தபடியாக மூன்றாவது முக்கிய சுழற்பந்து வீச்சாளராக இந்திய டெஸ்ட் அணியில் வலம் வருகிறார் வாஷிங்டன் சுந்தர்...






 


பேட்டிங்கிலும் 7வது விக்கெட்டுக்கு வாஷிங்டன் சுந்தரும் - ஷார்துல் தாகூரும் இணைந்து அடித்த 123 ரன்களை யாரும் மறந்துவிட முடியாது, அதுவே இந்திய அணி 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவில் தொடரை வெல்ல காரணமாக அமைந்தது...






இப்படியாக சுழற்பந்து வீச்சு மற்றும் பேட்டிங் இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு, சிறந்த டெஸ்ட் ஆல் ரவுண்டராகவும் கண்டறியபடுகிறார். இந்நிலையில் தான் அடுத்த மாதம் இங்கிலாந்தில் நடைபெற உள்ள டெஸ்ட் உலக கோப்பை சாம்பியன்ஷிப் தொடர் மற்றும் இங்கிலாந்து அணியுடனான 5 டெஸ்ட் போட்டிக்கள் கொண்ட தொடருக்கான 20 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது, இதில் வாஷிங்டன் சுந்தரும் இடம் பெற்றுள்ளார். 


இந்நிலையில் ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பியுள்ளார் வாஷிங்டன். கொரோனா நோய் நோய்த் தொற்றின் தீவிரம் சென்னையில் அதிகமாக காணப்படும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாஷிங்டன்னின் தந்தை M. சுந்தர் வேறொரு வீட்டில் தங்கியுள்ளார்.



இது குறித்து தெரிவித்துள்ள சுந்தர் "வாஷிங்டனின் அம்மா மற்றும் அக்கா இருவருமே வீட்டிலேயே இருக்கின்றனர், ஆனால் நான் அலுவலக பணிகள் காரணமாக வாரத்தில் ஓரிரு நாள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டியிருக்கிறது, கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகும் அபாயம் இருப்பதால் நான் வேறொரு வீட்டில் தங்கி இருக்கிறேன், என்னால் அவனுக்கு தொற்று ஏற்பட விரும்பவில்லை" என்றுள்ளார்..


"ஒரே ஊரில் இருந்தாலும், நாங்கள் வீடியோ காலில் தான் பேசி வருகிறோம்" வாஷிங்டன் தந்தை சுந்தர் தெரிவித்துள்ளார். அம்மாவின் பாசம் கருணையில் தெரியும், அப்பாவின் பாசம் அவரது கடமையில் புரியும் என்ற கவிதை வரிகளே நினைக்கவுக்கு வருகிறது.