ஐபிஎல் போட்டிகளில் பங்குபெறும் அணிகளை விளம்பரப்படுத்த ட்விட்டர் நிறுவனம் எமொஜிகளை வெளியிடுவது வழக்கம் . அந்த வகையில், இந்தாண்டும் பெங்களூர், சென்னை, ராஜஸ்தான் அணிகள் தொடர்பான எமொஜிகளை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டது. 


 






 


 


இருப்பினும், பெங்களூர் அணியின் எமோஜி மற்றும் ஹேஸ்டேக்கள் சென்னை அணியின் ஜெர்சியைக் கொண்டிருந்தன. ட்விட்டரின் இந்த தவறை பல நெட்டிசன்கள் சுட்டிக் காட்ட தொடங்கினார். பெங்களூர் அணி தனது ட்விட்டர் பதிவில், " ட்விட்டர், ட்விட்டர்இந்தியா, உங்களுக்கு சிறந்த தொழில்நுட்ப பொறியாளர்கள் தேவைப்படுவது போல் தெரிகிறது. தொழிநுட்ப வல்லுனர்களை பணியமர்த்த பெங்களூர் சிறந்த இடம்" என்று தெரிவித்தது. 










சென்னை அணியும் தன் பங்குக்கு ட்விட்டர் நிறுவனத்தையும், பெங்களூர் அணியையும் கலாய்க்கத் தொடங்கியது. தன் ட்விட்டர் பதிவில், "  ஒகே. #Yellove எல்லா இடங்களிலும் இருப்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம் ஆனால் .. " என்று பதிவிட்டது.   


 






 


மேலும், படையப்பா திரைப்படத்தில் சவுந்தரியாவின்  சிவப்பு உடையைக்  கண்ட காளை மாடு வெறித்து துரத்தும் போது, ரஜினிகாந்த  மஞ்சள் நீரை ஊற்றுவார். அந்த புகைப்படத்தையும் சென்னை அணி தனது ட்விட்டரில் பதிவிட்டு மகிழ்ச்சி கொண்டது.   


ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி தொடங்கி, மே மாதம் 30 ஆம் தேதி வரை ஐ.பி.எல் கிரிக்கெட் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 9-ம் தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகின்றன. அஹமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் அரை இறுதி போட்டிகளும், மே 30 அன்று இறுதிப் போட்டியும் நடைபெற இருக்கிறது.