இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் வீரேந்திர சேவாக், பாகிஸ்தான் தொலைக்காட்சி தொகுப்பாளரை ட்விட்டரில் கடுமையாக ட்ரோல் செய்துள்ளார். ஜெய்த் ஹமீத் என்ற இந்த தொகுப்பாளர் சமீபத்தில் பாகிஸ்தான் தடகள வீரர் அர்ஷத் நதீமைப் புகழ்ந்து ஒரு ட்வீட் செய்திருந்தார். இந்த ட்வீட்டில், முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ராவை ஈட்டி எறிதல் வீரர் என்று கூறி நீரஜ் சோப்ராவை அர்ஷத்துடன் ஒப்பிட்டார். இந்த ட்வீட்டிற்குப் பிறகு ஜைத் ஹமீத் சமூக ஊடகங்களில் பெரிதும் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார்.
காமன்வெல்த் போட்டியில் 90 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கம் வென்ற அர்ஷத் நதீம் குறித்து ட்வீட் செய்த ஹமீத், இந்த வெற்றியை மேலும் இனிமையாக்குவது என்னவென்றால் எங்கள் பாகிஸ்தான் வீரர் இந்திய ஈட்டி எறிதல் வீராங்கனை ஆஷிஷை வென்று சாதனை படைத்துள்ளார். என்று பதிவிட்டு இருந்தார். அந்த பதிவில், “ ஆஷிஷ் நெஹ்ரா கடந்த போட்டியில் அர்ஷத் நதீமை தோற்கடித்திருந்தார்... என்ன அழகான பதிலடி...' என்று பதிவிட்டிருந்தார்.
ஜைத் ஹமீத்தின் இந்த ட்வீட்டிற்குப் பிறகு, இந்திய ரசிகர்கள் அவரை கடுமையாக ட்ரோல் செய்யத் தொடங்கினர். இந்நிலையில், வீரேந்திர சேவாக் ட்வீட் செய்து, 'அங்கிள், ஆஷிஷ் நெஹ்ரா தற்போது இங்கிலாந்து பிரதமர் தேர்தலுக்கு தயாராகி வருகிறார்' என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் 90.18 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கம் கைப்பற்றினார். இதன் மூலம் இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ராவின் சாதனையையும் முறியடித்தார். துணைக்கண்டத்தில் இருந்து 90 மீட்டர் ஓட்டத்தை கடந்த ஒரே தடகள வீரர் அர்ஷத் நதீம் ஆவார். சமீபத்தில் டயமண்ட் லீக்கில் நீரஜ் சோப்ராவின் சாதனை 89.94 மீட்டர் தூரம் எறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் போது நீரஜ் சோப்ராவிற்கு ஏற்பட்ட இடுப்பு காயம் காரணமாக காமன்வெல்த் தொடரில் இருந்து விலகினார். காமன்வெல்த் போட்டிகள் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு அவர் தனது பெயரை வாபஸ் பெற்றார். சோப்ராவின் காயம் குணமடைய குறைந்தது மூன்று வாரங்கள் ஆகும், அதனால் அவர் விளையாட வேண்டாம் என்று மருத்துவ குழு அறிவுரை வழங்கியது. இதன் காரணமாகவே, தான் காமன்வெல்த் தொடரில் இருந்து விலகுகிறேன் என்றும், போட்டியில் பங்கேற்காததற்கு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்