வரி ஏய்ப்பு செய்ததாக தொழிலதிபர் சேகர்ரெட்டி 2,682 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும் என்ற வருமானவரித்துறையின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
2014 முதல் 2018ஆம் ஆண்டு வரைக்கான கால கட்டத்திற்கு உட்பட்ட காலத்தில் செகர் ரெட்டியின் நிறுவனமான எஸ்.ஆர்.எஸ் நிறுவனம் 4,442 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளதாக வருமானவரித்துறை அறிக்கை தாக்கல் செய்திருந்தது. இதனால், சேகர் ரெட்டி 2,862 கோடி ரூபாய் வருமான வரி செலுத்த வேண்டும் என வருமானவரித்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சேகர் ரெட்டி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த வழக்கில் வருமானவரித்துறை கண்ணாமூச்சி ஆடியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால், சேகர் ரெட்டியின் வருமான வரிக் கணக்கினை மீண்டும் மறு மதிப்பீடு செய்து மறு உத்தரவை பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
சேகர் ரெட்டிக்கு சொந்தமான எஸ்.ஆர்.எஸ். மைனிங் என்ற நிறுவனம், கடந்த 2014-15 முதல் 2017-18 ஆண்டு காலகட்டத்தில், மொத்தமாக வெறும் 384 கோடியே 55 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டியதாக கூறி வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்திருந்தது. கடந்த 2016ஆம் ஆண்டு சேகர்ரெட்டியின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்திய வருமான வரித்துறை, கோடிக்கணக்கிலான புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளையும், ஆவணங்களையும் பறிமுதல் செய்தனர்.
2014 முதல் 2018ஆம் ஆண்டு வரைக்கான கால கட்டத்திற்கு உட்பட்ட காலத்தில் செகர் ரெட்டியின் நிறுவனமான எஸ்.ஆர்.எஸ் நிறுவனம் 4,442 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளதாக வருமானவரித்துறை அறிக்கை தாக்கல் செய்திருந்தது. இதனால், சேகர் ரெட்டி 2,862 கோடி ரூபாய் வருமான வரி செலுத்த வேண்டும் என வருமானவரித்துறை உத்தரவு பிறப்பித்திருந்தது.
வருமானவரித்துறை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து எஸ்.ஆர்.எஸ். மைனிங் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி மாலா மற்றும் நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி அமர்வு, வருமான வரித்துறை வருமான மதிப்பீட்டின் போது இந்த வழக்கில் குறுக்கு விசாரணை செய்யப்படாத சாட்சிகளின் வாக்குமூலங்கள், பயன்படுத்தப்பட மாட்டாது என தனி நீதிபதி முன் உறுதியளித்த, அதற்கு மாறாக செயல்பட்டு, மனுதாரருடனும், நீதிமன்றத்துடனும் கண்ணாமூச்சி ஆடியுள்ளதாக கண்டனம் தெரிவித்தனர்.
இந்த அணுகுமுறையை ஏற்றுக் கொள்ள முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள் முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் மாலா , வருமான வரித்துறை விதித்திருந்த 2,862 கோடி ரூபாய் வருமான வரி செலுத்த வேண்டும் எனும் உத்தரவுகளை ரத்து செய்ய, 2014 முதல் 2018ஆம் ஆண்டுகளுக்கான வருமான வரிக்கணக்கை மறு மதிப்பீடு செய்து புதிதாக உத்தரவுகளை பிறப்பிக்க உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.