இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நேற்று விலகினார். டி20, ஒருநாள் அணி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய கோலி டெஸ்ட் அணி கேப்டன் பதவியையும் ராஜினாமா செய்தார். எல்லாமும் ஒருநாள் முடிவுக்கு வரும் என்பதை போலவே அணித் தலைவர் பதவியும் முடிவுக்கு வந்துள்ளது என்றும் கோலி குறிப்பிட்டிருந்தார்.





இந்த நிலையில், கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியது குறித்து ஷிகர் தவான், கே.எல்.ராகுல், பும்ரா, முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா ஆகியோர் தங்களின் கருத்துகளை கூறியுள்ளனர்.


 ‘இந்திய அணியை உச்சத்திற்கு கொண்டு சென்றதற்கு வாழ்த்துக்கள். உங்கள் தலைமையில் விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது, விராட்’ என ஷிகர் தவான் ட்வீட் செய்துள்ளார்.


 



 ‘எல்லா வகையிலும் ஒரு தலைவர். நீங்கள் செய்த அனைத்திற்கும் போதுமான நன்றி சொல்ல முடியாது’ என்று கே.எல்.ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டின் போது கோலி காயம் அடைந்ததால், அவருக்கு பதிலாக கே.எல். ராகுல் கேப்டனாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.


 






கேப்டனாக அணிக்கு  நீங்கள் செய்த பங்களிப்பு விலைமதிப்பற்றது என்றும், நீங்கள் இந்த அணிக்கு ஒரு சிறந்த தலைவராக இருந்ததாகவும், உங்கள் கீழ் விளையாடியது மகிழ்ச்சி அளிப்பதாகவும் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கூறியுள்ளார். 


 






 ‘எனக்கும் அதிர்ச்சியாக இருந்தாலும் கோலியின் திடீர் முடிவை மதிக்கிறேன். உலக கிரிக்கெட் மற்றும் இந்தியாவுக்காக அவர் செய்ததற்காக மட்டுமே நான் அவரை பாராட்ட முடியும். இந்தியாவுக்கு கிடைத்த மிக ஆக்ரோஷமான மற்றும் திறமையான வீரர்களில் ஒருவர். அவர் ஒரு வீரராக இந்தியாவுக்காக தொடர்ந்து பிரகாசிப்பார் என்று நம்புகிறேன்’ என்று முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.


 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண