Virushka Marriage Anniversary: ஐந்தாவது திருமண ஆண்டில் அடியெடுத்து வைத்த கோலி- அனுஷ்கா... உருக்கமாக பதிவிட்ட ஜோடிகள்!
ஐந்தாண்டு கால எல்லையற்ற பயணத்தை நிறைவு செய்துள்ளேன் என முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் திருமணமாகி இன்றுடன் 5 ஆண்டுகள் ஆகிறது. ஐந்தாவது திருமண நாளில், விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடனான புகைப்படங்களை தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டவை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோலியும், அனுஷ்கா சர்மாவும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர். ஆரம்பத்திலிருந்தே அவர்கள் தங்கள் காதல் உறவை வெளிபடுத்தவில்லை. இருப்பினும், இருவரும் படிப்படியாக தங்கள் காதலை வெளிப்படுத்தி, பொது இடங்களில் ஒன்றாக நடமாட தொடங்கினர். ஒரு கட்டத்தில் பகிரங்கமாக ஒப்புக்கொண்டனர்.
Just In




கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை, முன்னாள் இந்திய கேப்டன் கோலி திருமணம் செய்து கொண்டார். அவர்களது திருமண விழா முழுக்க முழுக்க இரு வீட்டார் குடும்பத்தினரால் நடத்தப்பட்டது. இத்தாலி சென்று சிறிய அளவில் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்து இந்தியா திரும்பிய பிறகு இருவரும் டெல்லியிலும், மும்பையிலும் பெரிய பார்ட்டிகளை ஏற்பாடு செய்து அதில் தங்களுக்கு நெருக்கமானவர்களை அழைத்து வரவேற்பு நிகழ்ச்சி நடத்தினர்.
இந்தநிலையில் தங்கள் ஐந்தாண்டு திருமண நாளை முன்னிட்டு கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "ஐந்தாண்டு கால எல்லையற்ற பயணத்தை நிறைவு செய்துள்ளேன். உன்னைப் பெற்றதில் நான் எவ்வளவு பாக்கியசாலி, என் இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து உன்னை நேசிக்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து, அதற்கு பதிலளிக்கும் விதமாக பதிவிட்ட அனுஷ்கா சர்மா, “எங்களைக் கொண்டாட இந்த அழகான படங்களை இங்கு பதிவிட்ட இன்று என்ன சிறந்த நாள், என் அன்பே! என்று 7 புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில், அனுஷ்கா பகிர்ந்த முதல் புகைப்படத்தில் அனுஷ்கா சர்மாவும், விராட் கோலியும் பாரி படத்தின் போஸ்டரில் உள்ளனர். அடுத்தது அவர்கள் இருவரையும் டெல்லிவாசிகளுடன் ஒப்பிட்டு ஒரு மீம்ஸ். விராட், ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் ஒரு காணாத புகைப்படம். ஒரு மும்பை மருத்துவமனையில் அனுஷ்காவின் பிரசவத்திற்குப் பிறகு மகள் வாமிகாவைப் பெற்ற ஒரு படம். அதில், குழந்தை வாமிகாவின் புகைப்படங்கள் மறைக்கப்பட்டுள்ளது.
அதற்கு பதிலளித்த விராட், “என்னைப் பற்றிய சிறந்த புகைப்படங்கள் உங்களிடம் கண்டிப்பாக இருக்கும் என எனக்கு தெரியும்” என்று கிண்டலாக கருத்து தெரிவித்தார்.