ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்:


விளையாட்டை பொறுத்தவரை ஏதாவது ஒரு விளையாட்டில் திறமையான வீரர்களாக இருப்பவர்களும் மற்றொரு விளையாட்டின் மீது கொண்ட காதல் இயற்கையானதாகவே இருக்கும். அது போன்ற சம்பவம் தான் தற்போதும் நடந்துள்ளது. முன்னதாக, ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் வருகிற 14-ந்தேதி மெல்போர்னில் தொடங்குகிறது. இதனிடையே இந்த தொடருக்கான தகுதிச் சுற்றுகள் நடந்து முடிந்துள்ளது.


டென்னிஸ் ஆடிய சுமித்:


இந்நிலையில் தான் இன்று டென்னிஸ் உலகின் இன்று ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடந்திருக்கிறது. அதன்படி, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக, நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான நோவாக் ஜோகோவிச் உடன் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஸ்டீவ் சுமித் ஆகியோர் இணைந்து டென்னிஸ் விளையாடியுள்ளனர். அதேபோல் இருவரும் டென்னிஸ் களத்திலேயே கிரிக்கெட் விளையாடுகின்றனர். இது தொடர்பாக வெளியாகியுள்ள வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.


அதன்படி, நோவாக் ஜோகோவிச் டென்னிஸ் பந்தை மறுபுறம் நிற்கும் ஸ்டீவ் சுமித்தை நோக்கி ஓங்கி அடிக்கிறார். அந்த பந்தை லாவகமா நோவாக் ஜோகோவிச்சிடமே திருப்புகிறார் சுமித். அதோடு அந்த பந்தை அடிக்காமல் விட்டுவிட அங்கு கூடிய இருந்த ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மூழ்குகின்றனர். உடனே, தன்னுடைய பேட்டை கைகளில் தட்டி உற்சாகபடுத்துகிறார் நோவாக் ஜோகோவிச்.


 






இந்த வீடியோக்களை பார்த்த ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். அதன்படி நெட்டிசன் ஒருவர், ''டென்னிஸ் ஓபனராக இருக்கும் நோவாக் ஜோகோவிச்சை, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் சுமித் டென்னிஸில் எதிர்கொண்டதை பார்ப்பது அவ்வளவு அழகாக இருக்கிறது'' என்று கூறியுள்ளார். மற்றொரு பயனர், "விளையாட்டின் மூலம் சர்வதேச அளவில் பிரபலமான இருவரையும் ஒரே நேரத்தில் பார்ப்பது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.


மேலும் படிக்க: IND vs AFG: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டி.. விராட் கோலி விலகல்! ட்ராவிட் சொன்ன காரணம்!


மேலும் படிக்க: Mohammed Shami: அர்ஜூனா விருது! முன்னாள் மனைவிக்கு முகமது ஷமி கொடுத்த பதிலடி - நெட்டிசன்கள் கருத்து