Earthquake: ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று 6.1 ரிக்டர் அளவுகோலில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிலும் எதிரொலித்தது. 


கடந்தாண்டு முழுவதும் உலகின் பல்வேறு பகுதிகளில் நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால், சில உலக நாடுகள் நிலைகுலைந்துள்ளதுடன், மற்ற நாடுகளும் பீதியடைந்தன. குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் மறக்க முடியாத சோகமான நினைவுகளை விட்டுச்சென்றது. 


ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்:






மேலும், 2024ஆம் ஆண்டு முதல் நாளிலேயே,   ஜப்பான் மத்திய பகுதியில் 7.2 ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலையில், இன்று ஆப்கானிஸ்தான் நாட்டில் இன்று 6.1 ரிக்டர் அளவுகோலில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.  ஆப்கானிஸ்தான் ஹிந்துகுஷ் பிராந்தியத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 






டெல்லியில் நில அதிர்வு:


கடுமையான நிலநடுக்கத்தால் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.  ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம்  பாகிஸ்தானில் மற்றும் வட இந்தியா பகுதிகளிலும் எதிரொலித்ததாக தெரிகிறது. பாகிஸ்தான் நாட்டின் லாகூர், இஸ்லாமாபாத், கைபர் பக்துன்க்வா ஆகிய பகுதிகளில் நில அதிர்வு  அதிக அளவில் உணரப்பட்டுள்ளது. இதனால், அங்குள்ள மக்கள்  அச்சத்துடன்  வீட்டில் இருந்து வெளியேறி உள்ளனர். 


இந்தியாவை பொருத்தவரை டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹரியானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.  இந்த நில அதிர்வால் வட மாநிலங்களில் பாதிப்பு ஏற்பட்டதா? என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 




மேலும் படிக்க


Climate Change: ஒரு லட்சம் ஆண்டுகளில் இல்லாத அளவு பதிவான வெப்பநிலை.. ஐரோப்பிய யூனியன் காலநிலை அமைப்பு அதிர்ச்சி தகவல்..


Ecuador Gunmen: தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியில் துப்பாக்கிகளுடன் வந்த கும்பல் - பற்றி எரியும் ஈக்வடார்