70 - 80 வயதிற்குட்பட்டவர்கள் பெரும்பாலும் தங்கள் பேரக்குழந்தைகளுடன் செலவிட விரும்புகிறார்கள். சிலர் உடல் நலத்தைக் காத்துக்கொள்ள விரும்புவர், மேலும் தங்களுக்குக் காயம் ஏற்படாதவாறு மென்மையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வார்கள். அதே வயதுடைய வேறு சிலர் விளையாட்டில் ஆர்வம் காட்டுகின்றனர். 70 மற்றும் 80 களில் இருக்கும் ஆண்களும் பெண்களும் விளையாட்டுகளில் சிறந்த திறமைகளை பெற்றிருப்பதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன. மீண்டும், அதேபோன்று அண்மையில் வயதான பெண் ஒருவர் கூடைப்பந்து விளையாடும் வீடியோ இணையத்தில் இருப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.



 'ஜோர்டான் பாட்டி’ என்று அழைக்கப்படும் ஆண்ட்ரியா கார்சியா லோபஸின் என்கிற பெண் தான் அவர். அந்த 71 வயது பாட்டி கூடைப்பந்து விளையாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் கூடைப்பந்து மைதானத்தில் தனது அற்புதமான திறமையை வெளிப்படுத்தி எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவதாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண் மெக்சிகோவில் உள்ள சான் எஸ்டெபன் அட்டாட்லாஹூகா, ஓக்ஸாகா என்ற சிறிய நகரத்தைச் சேர்ந்தவர்.


மைதானத்தில் அவரது கூடைப்பந்து திறன்களை சிறப்பாக வெளிப்படுத்தும் வீடியோ பல சமூக ஊடக தளங்களில் வெளியாகி மக்களை வாயடைக்கச் செய்கிறது. வீடியோவில், அவர் பந்துகளுடன் வித்தை காண்பித்து, தடைகளைக் கடந்து, கூடையில் பந்து வீசி, எதிராளியை மிகவும் அழகாக கையாண்டுப் புள்ளிகளைப் பெறுகிறார்.


லோபஸ் ஒரு உள்ளூர் கைவினைஞர். ஒரு நேர்காணலில், அவர் தான் முழங்கால் பிரச்சினைகளை எதிர்கொள்ளுவதாகவும், ஆனால் அவர் இன்னும் பல ஆண்டுகளாக கூடைப்பந்து விளையாட விரும்புவதாகவும் கூறியிருந்தார்.






லோபசைப் போல அண்மையில் கேரளாவில் ஒரு முதியவர் கால்பந்து ஆடும் வீடியோ ஒன்று வைரலானதும் குறிப்பிடத்தக்கது.