பொதுவாக ஒரு விளையாட்டு போட்டிகள் நடைபெறும் மைதானத்திற்குள் நாய்கள், பறவைகள் உள்ளிட்டவை  எப்போதாவது உள்ளே வருவது வழக்கம். அப்படி வரும் நாய்களை பெரும்பாலும் காவலர்கள் மற்றும் வீரர்கள் விரட்டு வெளியே அனுப்புவார்கள். இந்த சம்பவம் பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்களுக்கு ஒரு வித வியப்பு மற்றும் சிரிப்பை தரும் வகையில் அமையும். அப்படி ஒரு சம்பவம் நேற்று நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது நடந்துள்ளது. அது என்ன? எங்கே நடந்தது?


அமெரிக்காவின் மியாமி பகுதியிலுள்ள ஹார்டு ராக்  கால்பந்து மைதானத்தில் கல்லூரி அளவிலான கிளப் கால்பந்து போட்டி நடைபெற்றுள்ளது. இந்தப் போட்டியை காண பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்துள்ளனர். இந்தப் போட்டியின் போது ஒரு மேல் தளத்தில் இருந்து பூனை ஒன்று தவறி விழும் வகையில் சிக்கி தவித்து கொண்டிருந்துள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் அந்த பூனை நிச்சயம் கீழே விழும் என்பதை கணித்து அதை பிடிக்க ஒரு ஏற்பாடு செய்துள்ளனர். அதன்படி அமெரிக்க கொடி ஒன்றை நன்றாக விரித்து பிடித்துள்ளனர். அவர்கள் திட்டமிட்டபடி பூனை சரியாக கீழே விழும் போது அந்த கொடியை பயன்படுத்தி பூனையை காப்பாற்றி உள்ளனர். 


 






இந்த ரசிகர்களின் செயலை பார்த்த பிற ரசிகர்கள் பூனை உயிருடன் காப்பாற்றப்பட்டத்தை ஒரு கோல் அடித்தது போல் மிகவும் விமர்சையாக கத்தில் ஆராவாரம் செய்தனர். மேலும் மொத்த மைதானமே மகிழ்ச்சியில் குதித்து பெரியளவில் சத்ததை எழுப்பியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டப்பட்டுள்ளது. இந்த வீடியோவை தற்போது வரை 6 மில்லியனிற்கும் மேற்பட்டவர்கள் பார்த்து ரசித்து உள்ளனர். அத்துடன் பலரும் இந்த போட்டியின் சிறந்த தருணம் பூனையை காப்பாற்றியது தான் என்றும் பதிவிட்டு வருகின்றனர். 


 






முன்னதாக நேற்று இதேபோல் அயர்லாந்தில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி ஒன்றின் போது நாய் ஒன்று குறுக்கே வந்து பந்தை கவ்விக் கொண்டு ஓடியது. அதன்பின்னர் வீராங்கனைகள் அந்த நாயிடம் இருந்து பந்தை பெற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். இந்த வீடியோவும் ட்விட்டர் தளத்தில் மிகவும் வைரலானது. அந்த நாயை ஒரு சிறந்த ஃபில்டர் என்று எல்லாம் பலரும் பாராட்ட தொடங்கியிருந்தனர். 


மேலும் படிக்க: இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டா? என்ன சொன்னார் கங்குலி?