அக்டோபர் 4ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெறவிருந்த யுஎஸ் ஓப்பன் பேட்மிண்ட்டன் தொடர் கொரோனா காரணமாக ரத்து செய்யப்படுவதாக உலக பேட்மிட்டன் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தொடர் ரத்து:
கொரோனாவால் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக இந்த ஆண்டு பேட்மிண்ட்டன் தொடரை நடத்துவதற்கான சாதகமான சூழல் இல்லை என்பதால், தொடரை கை விடுவதாக அமெரிக்க பேட்மிண்ட்டன் அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக ஏற்கனவே இரண்டு தொடரை கைவிட்டிருந்த நிலையில், இந்த தொடரை அமெரிக்கா ரத்து செய்வது இது மூன்றாவது முறையாகும்.
-
கடைசியாக நடந்த தொடர்:
உலக பேட்மிட்டண் கூட்டமைப்பானது சூப்பர் 300 தொடரை அக்டோபர் 4ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடத்தத் திட்டமிட்டிருந்தது. ஆனால் இந்த ஆண்டும் கொரோனா பரவல் அமெரிக்காவில் அதிகமாகிவருவதால் போட்டிகளை நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. அதனால் வீரர்கள் மற்றும் ரசிகர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்படுள்ளது. எனினும் இந்தோநேசியா மாஸ்டர்ஸ் சூப்பர் 500 ஜகர்தாவில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடர் ஜூன் 12ம் தேதி வரை நடக்கிறது. கடைசியாக அமெரிக்காவில் 2019ல் கலிபோர்னியாவில் தொடரை நடைபெற்ற போது லின் சுன் யி ஆண்கள் ஒற்றையர் பிரிவிலும், வாங் ஷியி பெண்கள் ஒற்றையர் பிரிவிலும் பட்டத்தைத் தட்டிச் சென்றனர். அந்த தொடரானது உலக பேட்மிண்ட்டன் அமைப்பின் 13வது தொடராக இருந்தது.
2022ம் ஆண்டுக்கான தொடரானது 30 தொடர்களைக் கொண்டது. கொரோனா பரவல் பல்வேறு இடங்களில் அதிகரித்து வரும் நிலையில் உலக பேட்மிண்ட்டன் அமைபு போட்டிகளை மாற்றியமைத்துள்ளது.
அமெரிக்காவில் உயரும் கொரோனா பாதிப்பு:
அமெரிக்காவில் தற்போதைய சூழ்நிலையில் தினமும் 94000 கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. அதே நேரத்தில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் முதல் இந்த எண்ணிக்கை கணிசமாக நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. எனினும், கடந்த காலங்களைப் போல மிகத் தீவிரமாக பரவவில்லை என்று அமெரிக்கா தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்காவில் கொரோனா பதிவாகியுள்ளதை விட 30 மடங்கு அதிக அளவில் அது பரவியிருக்கும் என்று தி கார்டியன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு அமெரிக்காவில் திடீரென்று அதிகரித்து வரும் நிலையில் சுமார் 10 பில்லியன் டாலர்களை கொரோனா டெஸ்ட் மற்றும் தடுப்பூசிச்களை வாங்குவதற்காக ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.