கையில உடைந்த ஹாக்கி குச்சி, நல்ல சாப்பாடு கிடையாது, பயிற்சிக்கு செல்ல டிரெயினிங் டிரெஸ் கிடையாது. இப்படி எதுவுமே இல்லாத ஒரு பெண் இந்திய ஹாக்கி அணிக்கே கேப்டனாக மாறினார் என்று சொன்னால் அவர் எந்தளவிற்கு சோதனைகளை கடந்துருப்பார் என்று சிந்தித்து பாருங்கள். அந்த சோதனைகளை எல்லாம் கடந்து அதை சாதனைகளை மாற்றியவர்தான் ராணி ராம்பால். 


1994ம் வருஷம் டிசம்பர் 4-ந் தேதி ஹரியானா மாநிலம், ஷஹாபாத் மார்கண்டாவில் பிறந்தவர்தான் ராணி ராம்பால்.  ராணி ராம்பால் அப்பா ஒரு சாதாரண கூலிக்காரர். அவர் வண்டி இழுக்குற வேலை பாக்குறவரு. அவங்களோட அம்மா வீட்டு வேலை பாக்குறவங்க. ராணி ராம்பாலோட அப்பாவுக்கு ஒரு நாள் சம்பளமே 80 ரூபாய்தான். ஒரு நாளுக்கு முழுசா மூணு வேளை சாப்பாடு கூட கிடையாது. ரெண்டு வேளைதான் சாப்பாடு. மழை பெஞ்சு நிறைய முறை அவங்க வீடு வெள்ளத்துல கூட மூழ்கிருக்கு.




முறையா கரண்ட் வசதியில்லாத அவங்க வீட்டுல, கொசுக்கடியோட தூங்கி எந்திருக்குற ராணி ராம்பாலுக்கு பெரிய சந்தோஷமே அவங்க வீட்டு பக்கத்துல இருக்குற ஹாக்கி அகாடமிதான். சின்னக்குழந்தையா இருந்ததுல இருந்ததே ராணி ராம்பால் அவங்க வீட்டு பக்கத்துல இருக்குற அகாடமியில எல்லாரும் ஹாக்கி விளையாட்றதை மணிக்கணக்கா பாப்பாங்க. இதைப் பாத்துகிட்டே இருந்த ராணி ராம்பாலுக்கும் ஹாக்கி விளையாடனும் ஆசை வந்துச்சு.


ஆனா, ராணி ராம்பால் அப்பாவோட சம்பளத்துக்கு ஹாக்கி பேட் வாங்குறது எல்லாம் சாத்தியமே இல்லாதது. இருந்தாலும், ராணியே தினமும் அந்த அகாடமியில இருந்த பயிற்சியாளர்கிட்ட போயி “எனக்கும் ஹாக்கி சொல்லித்தாங்க”னு கேட்ருக்காங்க. ஆனா, அந்த பயிற்சியாளர் உன் உடம்புல போதுமான தெம்பு இல்லனு சொல்லி ராணி ராம்பாலை Reject பண்ணிட்டாரு..


ஆனாலும், ஹாக்கி மேல இருந்த ஆர்வம் ராணி ராம்பாலுக்கு குறையவே இல்ல. புதுசா ஹாக்கி ஸ்டிக் வாங்க காசு இல்லாததால, உடைஞ்சு போன ஹாக்கி ஸ்டிக் ஒன்னை எடுத்துகிட்டு, தான் போட்ருந்த சல்வார் கமீசோட ஹாக்கி கிரவுண்ட்ல ப்ராக்டீசை ஆரம்பிச்சாங்க.. அன்னைக்கு அப்படி ப்ராக்டீசை ஆரம்பிச்ச ராணி ராம்பால்தான் வருங்காலத்துல இந்திய மகளிர் டீமோட கேப்டனா வருவாங்கனு சொல்லிருந்தா அப்போ யாருமே நம்பிருக்க மாட்டாங்க..




உடைஞ்ச ஹாக்கி ஸ்டிக்கோட ட்ரெயினிங்கு கூட ப்ராபர்-ஆ டிரெஸ் இல்லாம சல்வார் கமீசோட கிரவுண்ட்ல ஓடுன ராணி ராம்பாலுக்கு பயிற்சியாளரை சமாதானப்படுத்துறதுதான் கஷ்டமா இருந்துச்சு. ராணி ராம்பாலோட குடும்பத்துக்கும் அவங்க ஹாக்கி ப்ராக்டீசுக்கு போறதுல முழு திருப்தி இல்லாம இருந்துச்சு.
ராணி ராம்பாலோட குடும்பம் அவங்க ஸ்கர்ட் போட்டு கிரவுண்ட்ல விளையாட்றதுக்கு அனுமதிக்க மாட்டோம்னு சொல்லிட்டாங்க.. ஆனா, ராணி ராம்பால் என்னை விளையாட போக விடுங்கனு கெஞ்சுனாங்க. அதுக்கு அப்புறம்தான் அவங்க குடும்பம் அவங்க விளையாட்றதுக்கு சம்மதிச்சாங்க...


ஒருவழியா வீட்ல இருக்கவங்களை சம்மதிக்க வச்ச ராணி ராம்பால் தினமும் விடியகாலையில ப்ராக்டீசுக்கு போகனும். ஆனா, ராணி ராம்பால் வீட்ல கடிகாரம்கூட கிடையாது. அதுனால, ராணி ராம்பாலோட அம்மா வானத்தை பாத்தே காலையில ராணி ராம்பாலை எழுப்பி கிரவுண்டுக்கு அனுப்பிடுவாங்க.. அகாடமியில ப்ராக்டீசுக்கு வர்ற எல்லா ப்ளேயரும் தினமும் காலையில 500 மில்லி அதாவது அரைலிட்டர் பால் கண்டிப்பா கொண்டு வந்து குடிக்கனும்…


ஆனா, நம்ம ராணி ராம்பால் வீட்ல தினமும் அரைலிட்டர் பால் வாங்குற அளவுக்கு எல்லாம் வசதி கிடையாது. இதுனால, 200 மில்லி மட்டும் பாலை கொண்டு போற ராணி ராம்பால், அதுல தண்ணியை கலந்து அரைலிட்டர் பாலாக்கி குடிச்சுக்குவாங்க. ராணி ராம்பாலோட ஹாக்கி ஆர்வத்தை பாத்த பயிற்சியாளர் அவங்களுக்கு பெரிய சப்போர்ட் பண்ண ஆரம்பிச்சாங்க.. அவரே ஹாக்கி ஸ்டிக், ஷூ எல்லாம் வாங்கிக் கொடுத்தாரு. ராணி ராம்பாலோட சாப்பாட்டையும் அவரே பாத்துக்கிட்டாரு.




ஒரு முறை ஒரு மேட்ச்ல ஜெயிச்சதுக்காக ராணி ராம்பாலுக்கு 500 ரூபாய் பரிசு கொடுத்தாங்க.. அந்த பணத்தை கொண்டு போயி ராணி ராம்பால் அவங்க அப்பாகிட்ட கொடுத்துருக்காங்க.. அது வரை 500 ரூபாயை அவங்க அப்பா சேந்தாப்ல பாத்ததே கிடையாது. அப்போ, ராணி ராம்பால் அவங்க அப்பாகிட்ட கூடிய சீக்கிரம் “நமக்கு சொந்தமா ஒரு வீட்டை நான் வாங்குவேன்”னு சொன்னாங்க.. சொன்ன மாதிரி 2017ல அவங்களோட அப்பா, அம்மாவுக்கு ஒரு வீட்டையும் வாங்கி கொடுத்தாங்க…


ராணி ராம்பால் ஹாக்கி மேல வச்சுருந்தா தீராக்காதல் அவங்க வாழ்க்கையை மாத்துனுச்சு.. அவங்க திறமை மேல நம்பிக்கை வச்சு அவங்களுக்கு இந்திய மகளிர் ஹாக்கி அணியில விளையாட சான்ஸ் கொடுத்தாங்க.. அப்போ ராணி ராம்பாலுக்கு வெறும் 15 வயசுதான். இந்தியாவுக்கு விளையாட வாய்ப்பு கிடைச்ச கொஞ்ச காலத்துல எப்போ கல்யாணம் பண்ணிக்க போறேனு அவங்க சொந்தக்காரங்க கேள்வி கேக்க ஆரம்பிச்சுட்டாங்க.


ஆனா, ராணி ராம்பாலோட அப்பா ராணிக்கிட்ட “உன் மனசு நினைக்குற வரை நீ விளையாடு மா”னு சொல்லிட்டாரு. Champion challenge tournament, asia cup, womens hockey world cup, Asian games-னு இந்தியாவுக்கு அசத்தலா பல நாட்டுல பல போட்டிகள்ல ஆடுன ராணி ராம்பாலோட திறமைக்கு இந்திய மகளிர் ஹாக்கி அணியோட கேப்டன் பதவியும் தேடி வந்துச்சு.. போன வருஷம் டோக்கியோவுல நடந்த ஒலிம்பிக் போட்டியில ராணி ராம்பால் தலைமையில இந்திய ஹாக்கி டீம் போராடி 4வது இடத்தை பிடிச்சாங்க.




டோக்கியோ ஒலிம்பிக்கில இந்திய மகளிர் அணி எந்த பதக்கத்தையும் ஜெயிக்காட்டினாலும், அவங்களோட தன்னம்பிக்கை மற்றும் விடா முயற்சியால கோடிக்கணக்கான இந்திய மக்களோட மனசை ஜெயிச்சாங்க.. ராணி ராம்பாலோட அப்பாவோட நண்பர் ஒருவர் அவரோட பொண்ணை ராணி ராம்பால்கிட்ட கூப்பிட்டு வந்து, “ இவ என் பொண்ணு.. உன்னை பாத்து ரொம்பவே இம்ப்ரஸ் ஆகிட்டா..ஹாக்கி பிளேயரா ஆகனும்னு ஆசைப்பட்றா… அவளுக்கு பயிற்சி கொடுனு” சொல்லிருக்காரு.. ராணி ராம்பாலுக்கு அப்படி ஒரு சந்தோஷம். ராணி ராம்பால் திறமையை பாராட்டி பத்மஸ்ரீ விருது, மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது கொடுத்து பெருமைப்படுத்திருக்காங்க..


நம்ம கனவுக்கும், லட்சியத்துக்கும் நாம உண்மையா உழைச்சா மட்டும் போதும்.. நம்மகிட்ட ஒன்னுமே இல்லாம இருந்தாலும் தைரியமா முதல் அடியை எடுத்து வச்சா மத்தது எல்லாம் தானா தேடி வரும் அப்படிங்கறதுக்கு நம்ம கேப்டன் ராணி ராம்பால் மிகப்பெரிய உதாரணம்..


Untold Stories : ஆபத்தான இங்கிலிஷ் கால்வாயை நீந்திக்கடந்த முதல் ஆசிய பெண்.. 19 வயதிலேயே பத்மஸ்ரீ.. யார் இந்த ஆரத்தி சாஹா?


Untold Stories 10 : நெல்சன் மண்டேலாவையே நெகிழவைத்த கால்பந்து புரட்சியாளர் விஜய் பார்சே...! அப்படி என்ன செய்தார்..?