கிரிக்கெட் ரசிகர்கள் மறக்க முடியாத ஒன்று மங்கூஸ் பேட். இன்றைக்கு பயன்பாட்டில் இல்லை என்றாலும் 90'ஸ் கிட்ஸ்கள் அவ்வளவு சீக்கிரம் இந்தப் பேட்டை மறந்திட மாட்டார்கள். வழக்கமான பேட்டில் 3 இல் 1 பங்கு தான் மங்கூஸ் பேட் இருக்கும். ஆனால் அதன் தடிமன் வழக்கமான பேட்டை விட மூன்று மடங்கு அதிகமாக இருக்கும். அனுமனின் தண்டாயுதம் போல. ஐபிஎல் போட்டிகளில் தான் இந்தப் பேட் ரொம்பவும் பிரபலமாக மாறியது.




 மங்கூஸ் பேட்டை எல்லா பேட்ஸ்மேனும் பயன்படுத்திட முடியாது. எப்படி தண்டாயுதம் அனுமனுக்கோ அதுபோல மங்கூஸ் வைத்துக் கொள்ளவும்  ஆஜானுபாகுவான ஒரு பிட்னஸ் அவசியம். காரணம் அதன் எடை சாதாரண பேட்டை விட ரொம்பவும் அதிகம். முதன் முதலில் ஐபிஎல் போட்டிகளில் இதனைப் பயன்படுத்தி எதிரணிகளுக்கு பயத்தைக் காட்டியவர் ஆஸ்திரேலியாவின் மாத்யூ ஹெய்டன்.




CSK அணிக்கு ஓப்பனிங் இறங்கிய போது தான் அவர் இதனைப் பயன்படுத்தினார் என்பது நமக்கெல்லாம் ஒரு பெருமையான விசயம். ஹெய்டனைப் பார்த்து மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் - உம் மங்கூசை கையில் எடுத்து அதகளம் பண்ணினார். இன்றைக்கு யாரும் பயன்படுத்துவதில்லை என்றாலும் ஒவ்வொரு ஐபிஎல் தொடரின் போதும் மங்கூஸ் பேட் பற்றிய நியாபகங்கள் கிரிக்கெட் ரசிகர்களுக்கு வந்து கொண்டுதான் இருக்கிறது.