உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி தற்போது இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் மழை காரணமாக இரண்டு நாட்கள் ஆட்டம் முற்றிலும் தடைபெற்றது. நேற்று இந்தப் போட்டியின் ஐந்தாவது நாள் ஆட்டம் நடைபெற்றது. அப்போது நியூசிலாந்து அணி வீரர்களை இந்திய அணி சிறப்பான பந்துவீச்சு மூலம் திணறடித்தது. 


நேற்றைய நாளில் இரண்டு சம்பவங்கள் மிகவும் வைரலானது. அது என்ன? எப்படி வைரலானது. 


விராட் கோலி-வில்லியம்சன் கேட்ச் பயிற்சி:


நியூசிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸில் ஆட்டத்தின் 94-வது ஓவரை இஷாந்த் சர்மா வீசினார். அந்த ஓவரின் கடைசி பந்தில் கேன் வில்லியம்சன் ஸ்லிப் திசையில் நின்று கொண்டிருந்த இந்திய கேப்டன் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். அவர் கேட்ச் கொடுத்த விதம் விராட் கோலிக்கு பயிற்சி அளிக்கும் வகையில் அமைந்தது. மேலும் இந்த போட்டியின் தொடக்கத்திற்கு முன்பாக டாஸ் போட்ட பிறகு இரு கேப்டன்களும் பேச வந்தனர். 






அப்போது கேன் வில்லியம்சன் மைக்கை எடுத்து விராட் கோலிக்கு வீசினார். அதை விராட் கோலி சரியாக பிடித்தார். அதேபோன்று ஆட்டத்திலும் கேன் வில்லியம்சன் கொடுத்த கேட்சை விராட் கோலி சிறப்பாக பிடித்தார். இது தொடர்பாக ஒருவர் ட்விட்டரில் போட்டிக்கு முன்பும் பின்பும் விராட் கோலிக்கு கேட்ச் வழங்கிய வில்லியம்சன் என்று பதிவிட்டிருந்தார். அந்த ட்விட்டர் பதிவு மிகவும் வைரலாகி வருகிறது. 


ரிஷப் பண்ட் ஜடேஜாவிக்கு வழங்கிய அறிவுரை:


நியூசிலாந்து அணியின் டெயில் எண்டர்கள் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். அவர்களின் சிறப்பான ஆட்டத்தால் தான் நியூசிலாந்து அணி 32 ரன்கள் முன்னிலை பெற்றது. அதிலும் குறிப்பாக டிம் சவுதி 2 சிக்சர்கள் விளாசி இந்திய பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்டார். நியூசிலாந்து முதல் இன்னிங்ஸின் 100ஆவது ஓவரை ஜடேஜா வீசினார். அந்த ஓவரின் முதல் பந்தில் சவுதி அசத்தலான சிக்சர் அடித்தார். 






இதனைத் தொடர்ந்து கீப்பிங் செய்து கொண்டிருந்த ரிஷப் பண்ட், “எப்படி டி கிராண்ட்ஹோமிற்கு பந்துவீசினீர்களோ அதே மாதிரி வீசுங்கள் ” என அறிவுரை வழங்கினார். இது ஸ்டெம்ப் மைக்கில் பதிவாகி இருந்தது. அதன்பின்னர் ஓவரின் இரண்டாவது பந்தை ஜடேஜா வீசினார். அந்தப் பந்தில் சவுதி கிளின் போல்ட் ஆகி 30 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அத்துடன் நியூசிலாந்து அணியின் இன்னிங்ஸூம் முடிவிற்கு வந்தது. இது தொடர்பான பதிவையும் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவும் வைரலாகி வருகிறது. 






இவை தவிர நேற்றைய போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி தூண்டு கட்டிக் கொண்டிருந்த படம் சமூக வலைதளத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: தோற்றாலும் ஜெயிச்சாலும் மீசையை முறுக்கு...தல தோனியின் நியூ லுக்..!