புரோ கபடி சீசன் 11:


புரோ கபடி 11வது சீசனுக்கான ஏலம் மும்பையில் நேற்று நடைபெற்றது.  இதில் சுமார் 500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். இதில் 12 அணிகள் ஏற்கனவே 88 வீரர்களை தக்கவைத்து கொண்ட நிலையில் 212 இடங்களுக்கான வீரர்கள் ஏலம் நடைபெற்றது.


இதில் தான் சச்சின் தன்வர் என்ற வீரரை தமிழ் தலைவாஸ் அணி அதிக விலைக்கு ஏலத்தில் எடுத்திருக்கிறது. அதாவது 2 கோடியே 15 லட்சம் ரூபாய் கொடுத்து அவரை தமிழ் தலைவாஸ் அணி எடுத்திருக்கிறது. இதன் மூலம் புரோ கபடி லீக்கில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருனையை அவர் பெற்றிருக்கிறார்.


இதேபோன்று ஈரானைச் சேர்ந்த முகமது ரைசா என்ற வீரருக்கு 2 கோடியே ஏழு லட்சம் ரூபாய் கொடுத்து ஹரியானா அணி வாங்கியிருக்கிறது. குமன் சிங் 1 கோடியெ 99 லட்சத்திற்கும், பவன் செஹ்ராவத் 1 கோடியே 72 லட்சத்திற்கும், பாரத் ஹூடாவை ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் கொடுத்து உபி அணியும், மனிந்தர் சிங்கை 1 கோடியே 15 லட்சத்திற்கும் ஏலத்தி எடுக்கப்பட்டுள்ளனர்.


முதல் சுற்று ஏலத்தில் அதிகம் வாங்கப்பட்டவர்கள்:


சச்சின் தன்வார் - இந்திய ரைடர் - 2.15 கோடி


முகமதுரேசா ஷட்லூயி சியானே - ஈரானிய ஆல்ரவுண்டர் - 2.07 கோடி


குமன் சிங் - இந்திய ரைடர் - 1.97 கோடி


பவன் செஹ்ராவத் - இந்திய ரைடர் - 1.72 கோடி


பாரத் ஹூடா - இந்திய ரைடர் -  1.30 கோடி


மனிந்தர் சிங் - இந்திய ரைடர் - 1.15 கோடி


அஜிங்க்யா பவார் - இந்திய ஆல்ரவுண்டர் -  1 கோடியே 10 லட்சம்


சுனில் மாலிக் - இந்திய டிஃபெண்டர் - 1 கோடியே 15 ஆயிரம்