ஐபிஎல் மினி ஏலம்:


அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்களை தேர்வு செய்வதற்கான, மினி ஏலம் இன்று கொச்சியில் நடைபெற உள்ளது. மொத்தமாக 991 பேர் ஐபிஎல் மினி இடத்தில் பங்கேற்க தங்களுடைய பெயரை பதிவு செய்து உள்ளனர். அவர்களில் 741 பேர் இந்தியர்கள் ஆவர். அவர்களோடு, ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்கான 14 நாடுகளை சேர்ந்த வீரர்கள் இந்த ஏலத்தில் தங்களது பெயரை முன்பதிவு செய்துள்ளனர்.


வீரர்களின் விவரங்கள்:


அந்த பட்டியலில் அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த  57 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். அதைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவில் இருந்து 52 வீரர்களும், மேற்கிந்திய தீவுகளில் இருந்து 33 வீரர்களும், இங்கிலாந்தில் இருந்து 31 வீரர்களும், நியூசிலாந்தில் இருந்து 27 வீரர்களும் முன்பதிவு செய்துள்ளனர்.  ஒரு அணி நிர்வாகத்தில் அதிகபட்சமாக 25 வீரர்களை தேர்வு செய்ய முடியும். அதன்படி அணி நிர்வாகங்கள் தக்க வைத்துக்கொண்ட வீரர்களை தவிர்த்து இன்னும் 87 வீரர்களை மட்டும் தான் அணிகள் தேர்வு செய்ய முடியும். மொத்தமுள்ள 87 இடங்களில் 30 பேர் வெளிநாட்டு வீரர்களால் நிரப்பப்பட உள்ளன.


 


10 அணிகளின் கைவசமுள்ள தொகை எவ்வளவு?


சென்னை சூப்பர் கிங்ஸ் - ரூ.20.45 கோடியை கையிப்பில் கொண்டுள்ளது. அதன் மூலம் 2 வெளிநாட்டு விரர்கள் உட்பட 7 இடங்களை நிரப்ப சென்னை அணி ஏலத்தில் பங்கேற்க உள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ரூ.42.25 கோடி கையிருப்புடன், 4 வெளிநாட்டு வீரர்கள் உடன் 13 இடங்களை நிரப்ப ஏலத்தில் பங்கேற்க உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் - ரூ.32.2 கோடி கையிருப்புடன் 9 வீரர்களுக்காவும்,  லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ரூ.23.35 கோடி கையிருப்புடன் 10 வீரர்களுக்காகவும் ஏலத்தில் ஈடுபட உள்ளன.


மும்பை இந்தியன்ஸ் - ரூ .20.55 கோடியுடன் 9 வீரர்களுக்காகவும்,  டெல்லி கேபிட்டல்ஸ் - ரூ .19.45 கோடியுன்  5 வீரர்களுக்காகவும்,  குஜராத் டைட்டன்ஸ் - ரூ.19.25 கோடியுடன் 7 வீரர்களுக்காகவும் ஏலத்தில் பங்கேற்க உள்ளன. ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ .13.2 கோடியுடன் 9 வீரர்களுக்காகவும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ரூ .8.75 கோடியுடன் 7 வீரர்களுக்காகவும்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ .7.05 கோடியுடன் 11 வீரர்களுக்காகவும் இன்று நடைபெற உள்ள ஏலத்தில் பங்கேற்க உள்ளன.


 


அதிகம் எதிர்பார்க்கப்படும் வீரர்கள்:



  1. மயங்க் அகர்வால்      – 1 கோடி ரூபாய்

  2. அஜிங்க்யா ரகானே   – 1.5 கோடி ரூபாய்

  3. ரைலி ரோசாவ்             - 2 கோடி ரூபாய்

  4. கனே வில்லியம்சன்   – 2 கோடி ரூபாய்

  5. சாம் கரன்                  - 2 கோடி ரூபாய்

  6. கேமரூன் கிரீன்          - 2 கோடி ரூபாய்

  7. ஷகிப் அல் ஹசன்    - 1.5 கோடி ரூபாய்

  8. ஜேசன் ஹோல்டர்    - 2 கோடி ரூபாய்

  9. பென் ஸ்டோக்ஸ்     - 2 கோடி ரூபாய்

  10. டாம் பான்டன்         - 2 கோடி ரூபாய்

  11. ஹென்ரிக் கிளாசென் – 1 கோடி ரூபாய்

  12. நிகோலஸ் பூரன்       - 2 கோடி  ரூபாய்

  13. பில் சால்ட்                 - 2 கோடி ரூபாய்

  14. கிறிஸ் ஜோர்டன்     - 2 கோடி ரூபாய்

  15. ஆடம் மில்னே          - 2 கோடி ரூபாய்

  16. அடில் ரஷீத்               - 2 கோடி ரூபாய்

  17. ட்ராவிஸ் ஹெட்       - 2 கோடி ரூபாய்

  18. டேவிட் மலான்        - 1.5 கோடி ரூபாய்

  19. மணீஷ் பாண்டே  - 1 கோடி ரூபாய்

  20. ஜிம்மி நீஷம்          - 2 கோடி ரூபாய்

  21. பிரண்டன் கிங்     - 2 கோடி ரூபாய்


பிரதான வீரர்களை அந்தந்த அணிகள் தங்களது அணியிலே தக்கவைத்துக்கொண்டுள்ளனர். சில வீரர்கள் ஏற்கனவே வேறு அணிகளுக்கு தேர்வாகிவிட்டனர். மயங்க் அகர்வால், பென்ஸ்டோக்ஸ், மணீஷ்பாண்டே, ஜிம்மி நீஷம், சாம் கரன் போன்ற வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டு ஏலத்திற்கு வந்துள்ளனர்