கிரிக்கெட்டில் எப்போதுமே வொயிட் பால் ஸ்பெஷலிஸ்ட், ரெட் பால் ஸ்பேசலிஸ்ட் என வீரர்களை பிரிப்பது உண்டு. அதற்கு ஏற்ற மாதிரி 20 ஓவர் போட்டிக்கு ஒரு அணி, 50 ஓவர் போட்டிக்கும், டெஸ்ட் போட்டிக்கும் வெவ்வேறு அணிகள் களமிறக்கப்படும். ஆனால் ஒரே நேரத்தில், இரண்டு நாடுகளில் - இரண்டு இந்திய அணிகள் களமிறக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்திய அணி ஏற்கனவே திட்டமிட்டபடி விரைவில் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அங்கே முதலில் ஜூன் 18-22ம் தேதி வரை டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் பங்கேற்கிறது. அதன் பின்னர் ஆகஸ்ட் 4ம் தேதி முதல் செப்டம்பர் 14-ஆம் தேதி  வரை இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இது ஏற்கனவே திட்டமிடப்பட்டு இங்கிலாந்து பயணம் செய்ய உள்ள இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுவிட்டது. 


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்து தொடருக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்திய வீரர்கள்:


( விராட் கோஹ்லி-கேப்டன், அஜிங்கியா ரஹானே-துணை கேப்டன், ரோகித் சர்மா, சுப்மன் கில், மயங்க் அகர்வால், புஜாரா, ஹனுமன் விஹாரி, ரிஷப் பந்த், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, சிராஜ், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ் ) (கே.எல் ராகுல், சஹா ஆகிய இருவரும் உடற்தகுதி நிரூபணம் செய்ய வேண்டும் )


இந்த நிலையில் ஜூலை மாதம் இலங்கை சுற்றுப்பயணத்தை திட்டமிட்டுள்ளது இந்திய கிரிக்கெட் வாரியம். ஜூலை 13, 16, 19ம் தேதிகளில் முதல் 3 ஒருநாள் போட்டியும், ஜூலை 22, 24, 27 ஆகிய தேதிகளில் 3 டி20 போட்டிகளும் திட்டமிடப்பட்டுள்ளது. ஜூலை 5ம் தேதி இந்திய அணி இலங்கை வந்து சேர்வது போன்ற ஒரு பயண திட்டத்தையும் இலங்கை கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ-க்கு அனுப்பியுள்ளது. கொரோனா நோய் தோற்று தாக்கம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. ஆகவே டெஸ்ட் சாம்பியன்ஷிப் முடித்த கையோடு இந்திய இலங்கை வந்துவிட்டு மீண்டும் இங்கிலாந்து திரும்ப வாய்ப்பில்லை. அதனால் இரண்டாவதாக ஒரு இந்திய அணி அறிவிக்கப்பட்டு, அந்த அணி இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


கோஹ்லி, ரோஹித், ஜடேஜா இல்லையா, கவலையில்லை என்கிறது இந்தியாவின் கிரிக்கெட் பெஞ்ச் ஸ்ட்ரெங்த்  


ஷிகர் தவான், புவனேஷ்வர் குமார், ஹார்டிக் பாண்டியா, சாஹல் என பலமாகவே காட்சியளிக்கிறது இந்திய அணி.


இலங்கை சுற்று பயணத்திற்கு செல்ல வாய்ப்புள்ள உத்தேச இந்திய அணி :


(ஷிகர் தவான், புவனேஷ்வர் குமார், ஹார்டிக் பாண்டியா, சாஹல், சஞ்சு சாம்சன், ப்ரித்வி ஷா, தீபக் சாஹர், ராகுல் சாஹர் , தேவதத் பல்லிகள், இஷான் கிஷன், சூரியகுமார் யாதவ், விஜய் ஷங்கர், சேத்தன் சக்கரியா, ஜெயதேவ் உனட்கட், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, ராகுல் தேவாதியா)


இப்படி பல சிறந்த வீரர்களில் இருந்து இரண்டாவது இந்திய அணியை தேர்ந்தெடுப்பதே இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு சவாலான காரியம்தான்!