உலகின் தவிர்க்க முடியாத செஸ் வீரராக உலா வருபவர் பிரக்ஞானந்தா. தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் இந்தியாவிற்காக பல நாடுகளில் வெற்றி பெற்றுள்ளார். செஸ் உலகின் தலைசிறந்த வீரராக கருதப்படுபவர் மேக்னஸ் கார்ல்சன்.


பிரக்ஞானந்தா அபாரம்:


கார்சல்சன் உலகின் பல ஜாம்பவான் செஸ் வீரர்களுக்கும் சிம்ம சொப்பனமாக திகழ்ந்தாலும் பிரக்ஞானந்தா அவருக்கே சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறார். இந்த சூழலில், உலகின் பிரபலமான செஸ் தொடர்களில் ஒன்றான நார்வே செஸ் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.


இதில் இந்தியாவின் சார்பில் பிரக்ஞானந்தா ஆடவர் பிரிவில் பங்கேற்றார். அவர் கிளாசிக்கல் பிரிவில் உலகின் நம்பர் 1 செஸ் வீரரான கார்ல்சனை அவருடன் ஆடிய 3வது சுற்றிலே வீழ்த்தினார். அதையடுத்து, உலகின் மற்றொரு தலைசிறந்த வீரரும், செஸ் தரவரிசையில் 2வது இடத்தில் உள்ளவருமான பேபியானோ காருவோனாவை 5வது சுற்றில் வீழ்த்தினார்.


முதலமைச்சர் பாராட்டு:


இந்த அபாரமான வெற்றி மூலம் பிரக்ஞானந்தா உலகின் தலைசிறந்த செஸ் வீரர்களுக்கான தரவரிசையில் 10வது இடத்திற்குள் முன்னேறியுள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.






உலகின் மிகப்பெரிய ஜாம்பவான்களை எளிதாக வீழ்த்திய பிரக்ஞானந்தாவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், நார்வே செஸ் தொடரில் பிரக்ஞானந்தா முற்றிலும் அபாரமான ஆட்டம். கிளாசிக்கல் செஸ் போட்டியில் உலகின் நம்பர் 1 கார்ல்சனை 3வது சுற்றில் தோற்கடித்தும், 5வது சுற்றில் உலகின் நம்பர் 2 வீரர் பேபியானோவை வீழ்த்தியும் அபாரமான சாதனை படைத்துள்ளார். உலகின் தலைசிறந்த 10 செஸ் வீரர்களில் ஒருவராகியுள்ள பிரக்ஞானந்தாவின், திறமையை கண்டு ஒட்டுமொத்த செஸ் உலகமே வியக்கிறது என்று முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


பிரக்‌ஞானந்தா சகோதரி வைஷாலியும் அசத்தல்:


பிரக்ஞானந்தா மட்டும் அவரது சகோதரியான வைஷாலியும் நார்வே செஸ் தொடரில் மிரட்டி வருகிறார். அவர் முன்னணி வீராங்கனையான பியா கிராம்லிங்கை எளிதாக வீழ்த்தினார். நார்வே செஸ் தொடரில் தற்போது நடைபெற்று முடிந்துள்ள 5 சுற்றுகளின் படி,


ஆடவர் பிரிவில் ஹிகாரு நகமுரா 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். கார்ல்சன் 9 புள்ளிகளுடனும், பிரக்ஞானந்தா 8.5 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளார். மகளிர் பிரிவில் வைஷாலி 10 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அன்னா  முசிஷக் 9 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், ஜூ வென்ஜூன் 7.5 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளனர்.


மேலும் படிக்க: USA vs Canada T20 WC 2024: 10 சிக்ஸர்! 22 பந்துகளில் அரைசதம்! கனடாவை கதிகலங்க வைத்த ஜோன்ஸ்! யார் இவர்?


மேலும் படிக்க: USA vs Canada T20 WC 2024: ஜோன்ஸ் வெறித்தனம்! வெற்றியுடன் டி20 உலகக்கோப்பையை தொடங்கிய அமெரிக்கா!