Tamil Thalaivas vs Telugu Titans LIVE: தெலுகு டைட்டன்ஸை துவம்சம் செய்து தமிழ் தலைவாஸ் ஹாட்ரிக் வெற்றி

Tamil Thalaivas vs Telugu Titans LIVE: ப்ரோ கபடி லீக் 10வது சீசனில் தமிழ் தலைவாஸ் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை ஏபிபிநாடு தளத்தில் காணலாம்.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 24 Jan 2024 10:07 PM
தெலுகு டைட்டன்ஸை துவம்சம் செய்து தமிழ் தலைவாஸ் ஹாட்ரிக் வெற்றி

தெலுகு டைட்டன்ஸ் அணிக்கு எதிராக தமிழ் தலைவாஸ் அணி 25 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

Tamil Thalaivas vs Telugu Titans LIVE: 50 புள்ளிகளை எடுத்த தலைவாஸ்

தமிழ் தலைவாஸ் அணி 50 புள்ளிகள் எடுத்து அசத்தியுள்ளது. 

Tamil Thalaivas vs Telugu Titans LIVE: சூப்பர் டேக்கிளில் புள்ளிகளை அள்ளும் தமிழ் தலைவாஸ்

தமிழ் தலைவாஸ் அணி 41 புள்ளிகள் எடுத்துள்ளது. தமிழ் தலைவாஸ் அணி சூப்பர் டேக்கிளில் புள்ளிகளை அள்ளி வருகின்றது. 

Tamil Thalaivas vs Telugu Titans LIVE: மீண்டும் ஆல் அவுட் ஆனது தெலுகு

தெலுகு டைட்டன்ஸ் அணி மூன்றாவது முறையாக ஆல் அவுட் ஆனது. இதனால் தமிழ் தலைவாஸ் அணி 38 புள்ளிகள் எடுத்துள்ளது. 

Tamil Thalaivas vs Telugu Titans LIVE: கடைசி 10 நிமிடங்கள்

இரண்டாம் பாதியின் முதல் 10 நிமிடங்கள் முடிந்தது. இந்த நேரத்தில் தமிழ் தலைவாஸ் அணி 34 புள்ளிகளும் தெலுகு டைட்டன்ஸ் அணி 16 புள்ளிகளும் எடுத்துள்ளது. 

Tamil Thalaivas vs Telugu Titans LIVE: மீண்டும் ஆல் அவுட் ஆன தெலுகு

தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிராக தெலுகு டைட்டன்ஸ் அணி இரண்டாவது முறையாக ஆல் அவுட் ஆகியுள்ளது. 

Tamil Thalaivas vs Telugu Titans LIVE: கெத்து காட்டும் தமிழ் தலைவாஸ்

தமிழ் தலைவாஸ் அணி 10 புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது. தலைவாஸ் 23 புள்ளிகளும் தெலுகு 13 புள்ளிகளும் எடுத்துள்ளது. 

Tamil Thalaivas vs Telugu Titans LIVE: 20 புள்ளிகளில் தலைவாஸ்

தமிழ் தலைவாஸ் அணி முதல் பாதி ஆட்டம் முடிவில் 20 புள்ளிகள் சேர்த்து முன்னிலை வகிக்கின்றது. தெலுகு டைட்டன்ஸ் அணி 11 புள்ளிகள் எடுத்துள்ளது. 

Tamil Thalaivas vs Telugu Titans LIVE: தெலுகு டைட்டன்ஸ் ஆல் அவுட்

தெலுகு டைட்டன்ஸ் அணி ஆல் அவுட் ஆகியுள்ளது. சிறப்பாக விளையாடி வரும் தலைவாஸ் 14 புள்ளிகள் எடுத்து விளையாடி வருகின்றது. 

Tamil Thalaivas vs Telugu Titans LIVE: 10 புள்ளிகள் எடுத்த தமிழ் தலைவாஸ்

தமிழ் தலைவாற் அணி 10 புள்ளிகள் எடுத்து சிறப்பாக விளையாடி வருகின்றது. 

Tamil Thalaivas vs Telugu Titans LIVE: முடிந்தது முதல் 10 நிமிடங்கள்

போட்டியின் முதல் பாதியின் முதல் 10 நிமிடங்கள் முடிந்தது. இதில் தமிழ் தலைவாஸ் அணி 7 புள்ளிகளும் தெலுகு டைட்டன்ஸ் அணி 6 புள்ளிகளும் எடுத்துள்ளது. 

Tamil Thalaivas vs Telugu Titans LIVE: முன்னிலையில் தலைவாஸ்

தமிழ் தலைவாஸ் அணி டிஃபெண்டிங்கில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவதால் புள்ளிக் கணக்கில் முன்னிலையில் உள்ளது. 

விறுவிறுப்பான போட்டி; புள்ளி வேட்டையில் அணிகள்; கெத்து காட்டும் தமிழ் தலைவாஸ்

இரு அணிகளும் தலா 5 புள்ளிகளுடன் விளையாடி வருகின்றது. 

Tamil Thalaivas vs Telugu Titans LIVE: புள்ளிக் கணக்கை தொடங்கிய தலைவாஸ்

தமிழ் தலைவாஸ் அணி புள்ளிக்கணக்கை தொடங்கி அசத்தியுள்ளது. 

Tamil Thalaivas vs Telugu Titans LIVE: தொடங்கியது போட்டி

தமிழ் தலைவாஸ் தெலுகு டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி தொடங்கியது. 

Tamil Thalaivas vs Telugu Titans LIVE: களத்திற்கு வந்த அணிகள்

தெலுகு டைட்டன்ஸ் மற்றும் தமிழ் தலைவாஸ் அணி வீரர்கள் களத்திற்கு வந்தனர். 

Tamil Thalaivas vs Telugu Titans LIVE: தமிழ் தலைவாஸ் vs தெலுகு டைட்டன்ஸ்

இன்று தமிழ் தலைவாஸ் அணி தெலுகு டைட்டன்ஸ் அணிக்கு எதிராக களமிறங்கவுள்ளார். 

Background

10-வது ப்ரோ கபடி லீக்  இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் களமாடி வருகின்றன. இந்நிலையில், இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி தெலுங்கு டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.


தமிழ் தலைவாஸ் vs தெலுங்கு டைட்டன்ஸ்:


நடப்பு சீசனில் இதுவரை 14 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி 5 போட்டிகளில் வெற்றியும், 9 போட்டிகளில் தோல்வி என மொத்தம் 30 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 10-வது இடத்தில் இருக்கிறது. மறுபுறம், 15 போட்டிகளில் விளையாடியுள்ள தெலுங்கு டைட்டன்ஸ் 2 போட்டிகளில்  வெற்றியும், 13 போட்டிகளில் தோல்வி அடைந்து 16 புள்ளிகளுடன் 12-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் தான் இந்த இரு அணிகளும் களம் காண்கிறது.


 


நேருக்கு நேர் 


ப்ரோ கபடி லீக் வரலாற்றில் தெலுங்கு டைட்டன்ஸ் 13 முறை தமிழ் தலைவாஸ் அணியை எதிர்கொண்டுள்ளது. இதில், தமிழ் தலைவாஸ் 7 முறை வெற்றி பெற்று உள்ளது, தெலுங்கு டைட்டன்ஸ் 5 முறை வெற்றி பெற்றுள்ளது. இந்த அணிகளுக்கு இடையேயான ஒரு போட்டி டையில் முடிந்துள்ளது. தெலுங்கு டைட்டன்ஸ் மற்றும் தமிழ் தலைவாஸ் அணிகளுக்கு இடையேயான முந்தைய போட்டியில் 38-36 என்கிற கணக்கில் தமிழ் தலைவாஸ்  அணி வெற்றி பெற்றது கவனிக்கத்தக்கது.  


 


மேலும் படிக்க: Yuvraj Singh: இந்தியாவுக்கு திறமை இருக்கு; ஆனாலும் தோல்வி ஏன்? - ஆலோசகராக விரும்பும் யுவராஜ் சிங்!


 


மேலும் படிக்க: Ind vs Afg 2nd T20I: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டி... அந்த ரெண்டு பேருக்கு வாய்ப்பு கொடுங்க! ரெய்னா வைத்த கோரிக்கை!


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.