2025 புரோ கபடி லீக் சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தாலும் தமிழ் தலைவாஸ் அணி தொடர் தோல்வியின் மூலம் புள்ளிப்பட்டியலில் மிக மோசமான இடத்தை பிடித்து அதிர்ச்சி அளித்துள்ளது. தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்று 5 புள்ளிகளை பெற்றாலும், அடுத்தடுத்த ஆட்டங்களில் தோல்வியை தழுவி சரிவை சந்தித்து வருகிறது தமிழ் தலைவாஸ் அணி.

Continues below advertisement

12 அணிகள் விளையாடும் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 11ஆவது இடத்தை பிடித்திருக்கிறது. இதனால், ப்ளே-ஆஃப் கனவு பலிக்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. -9 புள்ளிகளில் இருப்பதால் தமிழ் தலைவாஸ்  அணியமின் மிக மோசமான ஓபனிங் ஆட்டம் என ரசிகர்கள் விமர்சிக்க தொடங்கிவிட்டனர். போன முறை வெற்றி வாய்ப்பை தவறவிட்டார்கள். ஆனால், இந்த முறை ப்ளே ஆப்பிற்கு கூட போகாது போல என்றும் காமெடியாக கலாய்க்க தொடங்கிவிட்டார்கள். 

மோசமான இடத்தில் தமிழ் தலைவாஸ் 

முதல் வெற்றி பிரகாசமாக இருந்தாலும் இரண்டாவது போட்டியில் தமிழ் தலைவாஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணி ஆரம்பம் முதலே சிறப்பாக செயல்பட்டு தமிழ் தலைவாஸ் மீது அழுத்தம் கொடுத்தது. இதன் காரணமாக முதல் பாதி முடிவில் குஜராத் அணி 9 ரைட் புள்ளிகள், 7 டெக்கிள் புள்ளிகள், இரண்டு கூடுதல் புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. 

Continues below advertisement

டெல்லி அணி முதலிடம்

டெல்லி அணி இதுவரை நடந்த 3 போட்டிகளில் வெற்றி பெற்று 16 புள்ளிகள் பெற்றுள்ளது. பெங்கால் வாரியர்ஸ் அணி 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று 15 புள்ளிகளுடன் 2ஆம் இடத்தை தக்க வைத்துக்கொண்டது. ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - 3 போட்டிகளில் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.  1 தோல்வியுடன் 12 புள்ளிகளை பெற்றுள்ளது. ஆனால், தமிழ் தலைவாஸ் அணியை விட கவலைக்கிடமான நிலையில் இருப்பது தெலுங்கு டைட்டன்ஸ் அணிதான். நடந்து முடிந்த 3 போட்டிகளிலும் தோல்வியை தழுவி புள்ளி பட்டியலில் 12ஆவது இடத்தை பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.