சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் தகுதிச் சுற்றில் விளையாட தமிழக வீராங்கனை சம்ஹிதா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து வருகிற செப்டம்பர் 10, 11 ம் தேதி நடைபெறும் தகுதிச்சுற்று போட்டிகளில் வெற்றிபெறும் வீராங்கனைக்கு சென்னை ஓபன் தொடரில் விளையாட வாய்ப்பு தரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.