Top News | சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கவனிக்கவேண்டிய முக்கிய செய்திகள்

வெள்ள அபாய எச்சரிக்கை, ஸ்ரீபெரும்புதூரில் போலீஸ் , தேடுதல் வேட்டை, உள்ளிட்ட முக்கிய செய்திகள் இதோ

Continues below advertisement
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருச்சி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 43 இடங்களில் அதிரடி சோதனை
 
செங்கல்பட்டு மாவட்டத்தில், பாலாற்றங்கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  மாவட்டத்தில், பாலாற்றில் வலது புறம் உள்ள கிராமங்கள் பிலாப்பூர், சிதண்டி, அத்தியூர், சம்பாதிநல்லுார், மெய்யூர், மாமண்டூர், பழமத்துார், பூதுார், ஈசூர், தண்டரை, கடலுார், இரும்புலிச்சேரி, எடையத்துார். இடதுபுறம் உள்ள கிராமங்கள் மேலச்சேரி, பாலுார், தேவனுார், வில்லியம்பாக்கம், ஆத்துார், திம்மாவரம், பழவேலி, இருங்குன்றபள்ளி, ஒழலுார், மணப்பாக்கம், உதயம்பாக்கம், ஆனுார், வல்லிபுரம், விளாகம், பாண்டூர், பாக்கம், நெரும்பூர், பனங்காட்டுச்சேரி, நல்லாத்துார், ஆயப்பாக்கம், வாயலுார் ஆகிய கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

 
செம்பரம்பாக்கத்தில் மது போதையில் கல்லூரி மாணவர் 8 வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு.
 
ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் வடமாநில குற்றவாளிகள் தங்கியுள்ளனரா என கண்டறிய 6 தனிப்படைகள் கொண்ட "ஆப்ரேஷன் சர்சிங்" எனும் பெயரில் தேடுதல் வேட்டையை காவல்துறையின் தொடங்கி உள்ளனர்.

 
சென்னையில் இருந்து திருவள்ளூருக்கு நேற்று சைக்கிளில் வந்த டிஜிபி சைலேந்திரபாபு, திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். தமிழக காவல் துறை இயக்குநர் சைலேந்திரபாபு நேற்று காலை சென்னையிலிருந்து, திருவள்ளூருக்கு சைக்கிளில் பயணம் செய்தார். 
 
கம்ப கால்வாயில் ஆறு வருடங்களுக்குப் பிறகு நீர் வரத்து, வந்துள்ளதால் ஏரிகள் விரைவாக நிரம்புவதற்கு வாய்ப்பு விவசாயிகள் மகிழ்ச்சி.

 
தமிழ்நாடு முழுவதும் சுற்றுலாத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் உணவகங்களை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன்  காஞ்சிபுரத்தில் தெரிவித்தார்.
 
திருவள்ளூர் அருகே பூண்டி சத்தியமூர்த்தி நீர்தேக்கத்தை சுற்றிப்பார்க்க சென்ற சுற்றுலா பயணிகள் மீது மலைத்தேனீ கொட்டியதில் சுற்றிப் பார்க்கச் சென்றவர்கள் மருத்துவமனையில் அனுமதி

 
சென்னை ஐஐடி வளாகத்தில் 45 நாய்கள் இறந்துள்ளதாக கூறப்படும் சம்பவம் குறித்து ஐஐடி நிா்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
 
குப்பையில் கிடந்த, 100 கிராம் தங்க நாணயத்தை, போலீசாரிடம் ஒப்படைத்த துாய்மை பணியாளர்களுக்கு, போலீசார், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

 
மெட்டி ஒலி' சீரியலில் நடித்த நடிகை உமா மகேஸ்வரி, 40, உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். 
Continues below advertisement
Sponsored Links by Taboola