2021 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான மோதலை கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துள்ளனர். வரும் 24ஆம் தேதி இரண்டு பரம எதிரிகளுக்கிடையில் நடத்தப்படும் இந்த பிளாக்பஸ்டர் மோதல் போட்டி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டிகளில் ஒன்றாகும்.


மேலும், இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டன. சமீபத்தில், ஒரு ரசிகர் பாகிஸ்தானின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடியிடம் இந்த மோதலுக்கு டிக்கெட் கேட்டார்.


இதற்கு, அஃப்ரிடி தனது பாக்கெட்டைச் சரிபார்த்து, அவரிடம் டிக்கெட்டுகள் கிடைக்கவில்லை என்று ரசிகருக்கு சமிக்ஞை செய்கிறார். இந்த காட்சி அங்குள்ள ஒருவர் வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.






 


முன்னதாக, இதேபோல் தற்போது நடைபெற்ற முடிந்த ஐபிஎல் போட்டியின்போது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டை ரசிகர்கள் ரோகித் சர்மாவிடம் கேட்டனர்.




Ind vs Pak T20 WC Records: பாகிஸ்தானை எதிர்த்து தொடர்ந்து வெற்றி வேட்டை(T20) நடத்தும் இந்தியா : வரலாறு சொல்வது என்ன தெரியுமா?


வரும் 24ஆம் தேதி நடைபெற உள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டில்,  5 வருடங்களில் இரு பரம எதிரிகளுக்கும் இடையிலான முதல் சந்திப்பாகும். கடைசியாக இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவரை ஒருவர் 2016 டி20 உலகக்கோப்பையில் மோதினர். 2016  மார்ச் 19ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.


2021 டி20 உலகக் கோப்பையில் இந்தியா தனது இரண்டு பயிற்சி ஆட்டங்களையும் வென்றுள்ளது.  இங்கிலாந்து அணியை 7 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்தியா, அடுத்தப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பாகிஸ்தான் வெஸ்ட் இண்டீஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அடுத்தப்போட்டியில்,  தென்னாப்பிரிக்கா பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 


2007 ஆம் ஆண்டு முதல் டி20 உலகக் கோப்பை இந்தியா வென்றது. ​​பாகிஸ்தான் 2009 உலகக்போட்டியை வென்றது.