ரெஸ்ட்லமேனியா, ராயல் ரம்பிள், நோ வே அவுட், ஹெல் இன் எ செல் வரிசையில், சம்மர் ஸ்லாம் தொடர் ரெஸ்ட்லிங்கில் ரொம்ப பிரபலம். முன்னதாக, கொரோனா பரவலால், இந்த ஆண்டு நடைபெற இருந்த ”ஹெல் இன் எ செல்” நிகழ்ச்சி ரசிகர்கள் இல்லாமல் நடந்து முடிந்தது. அதனை தொடர்ந்து, இன்று நடைபெற்ற சம்மர் ஸ்லாம் தொடர் அதகளமாய் நடந்து முடிந்துள்ளது. லாஸ் வேகாஸ் நகரத்தில், மீண்டும் ரசிகர்கள் படையுடன் நடந்து முடிந்த சம்மர் ஸ்லாம் தொடரின் ஹைலைட்ஸ் இங்கே!


ஜான் சீனா vs ரோமன் ரெயின்ஸ் 






வழக்கான முறைப்படி, ரெஸ்ட்லிங் சாம்பியன்ஷிப்புக்கான போட்டி கடைசியாக நடந்தது. ரெஸ்ட்லிங் சூப்பர் ஸ்டார் ஜான் சீனாவை எதிர்த்து ரோமன் ரெயின்ஸ் போட்டியிட்டார். 16 முறை ரெஸ்ட்லிங் சாம்பியனான சீனா, தனது 17வது பட்டத்தை கைப்பற்றும் முனைப்பில் இன்றைய போட்டியில் களமிறங்கினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு, பெரிய ரெஸ்ட்லிங் தொடரில் பங்கேற்ற சீனாவுக்கு ஏகபோக வரவேற்பு. வழக்கமான அவரது ஸ்டைலில், தீம் மியூசிக் ப்ளே ஆக ரிங்கிற்கு எண்ட்ரி கொடுத்தார் சீனா. ரசிகர்கள் ஆர்ப்பரிக்க தொடங்கிய இந்த போட்டி, ஒரு மணி நேரம் நீடித்தது. 


ரெஸ்ட்லிங் ரிங்கில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு சரவெடியான மேட்ச் பார்த்த அனுபவத்தில் ரசிகர்கள் தங்களது ஃபேவரைட் நட்சத்திரத்தை உற்சாகப்படுத்தி வந்தனர். சீனாவின் ஸ்டைலில் அவர் செய்த ஆட்டியுட்ட் அட்ஜெஸ்ட்மெண்ட் அவ்வளவாக கைக்கொடுக்கவில்லை. சாம்பியன் பட்டத்தோடு ஓராண்டு நிறைவு செய்ய இருக்கும் ரோமன் ரெயின்ஸ், சாம்பியன்ஷிப்பை தக்க வைக்க முழுவீச்சில் போராடினார். போட்டி முடிவில், ரோமன் ரெயின்ஸ் ஜான் சீனாவை தோற்கடித்துவிட்டார். 






ஆனால், அதோடு போட்டி முடிந்துவிடவில்லை. ரோமன் ரெயின்ஸ்க்கு சவால் விடுக்கும் வகையில் ப்ராக் லெஸ்னர் ரெச்ட்லிங் ரிங்கிற்கு எண்ட்ரி கொடுத்தார். ரோமன் ரெயின்ஸ்க்கு சவால் விடுத்திருக்கிறார் ப்ராக் லெஸ்னர். அடுத்த சம்வங்கள் வரிசைக்கட்ட தொடங்கி உள்ள்து. 


மற்ற போட்டிகளின் முடிவுகள்:


மகளிர் சாம்பியன்ஷிப்: சார்லட் ஃப்ளேர் போட்டியை வென்றார். நிக்கி ஆஷ், ரியா ரிப்ளியை தோற்கடித்தார்


யுனைட்டெட் ஸ்டேட்ஸ் சாம்பியன்ஷிப்: டேமியன் ப்ரீஸ்ட், சேமஸை தோற்கடித்தார்


ட்ரியூ மெக்கிண்டைர் ஜிந்தர் மகாலை தோற்கடித்தார்


ஸ்மாக்டவுன் டேக் டீம் சாம்பியன்ஷிப் - தி உசோஸ், மிஸ்டீரியோஸை தோற்கடித்தனர்


சீத் ரோலின்ஸ் எதிர்த்து எட்ஜ் போட்டியிட்டதில், எட்ஜ் வெற்றி பெற்றார்


டபிள்யூ.டபிள்யூ.இ சாம்பியன்ஷிப் - கோல்ட் பர்க்கை பாபி லஷ்லி தோற்கடித்தார்.


Also read: சென்னைக்கு எல்லோருமே ஒன்னுதான்... எல்லோருக்கும் சென்னை ஒன்னுதான்! ஹாப்பி பர்த்டே சென்னை!