அபுதாபியில் நடைபெற்ற தற்காப்பு கலை சாம்பியன்ஷிப் (Pencak Silat) போட்டியில் மூன்றாம் இடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்ற மாணவனை சாரட் வண்டியில் ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து சென்று பள்ளி சார்பில் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர்.


உலகளவிலான தற்காப்பு கலை போட்டி


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி விவேகானந்தா கல்வி குழுமம் செயல்பட்டு வருகிறது. இக்குழுமத்தின் குட் சமாரிட்டன் பப்ளிக் பள்ளி பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் சஞ்சீவ். இவர் அபுதாபியில் நடைபெற்ற உலகளவிலான தற்காப்பு கலை போட்டியில் (5th Junior World Pencak Silat Championship 2024) இந்தியா சார்பில் பங்கேற்று மூன்றாம் இடம் பிடித்து பதக்கம் பெற்றுள்ளார். 


இதையும் படிங்க : Special Classes: அரையாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள்?- தனியார் பள்ளிகள் இயக்குநர் அதிரடி உத்தரவு




சாரட் வண்டியில் ஊர்வலம் 


இந்நிலையில் பதக்கம் வென்று சொந்த ஊரான சீர்காழி வந்த பள்ளி மாணவனுக்கு சீர்காழி ரயில் நிலையத்தில் பள்ளி நிர்வாகம் சார்பாக மாலை அணிவித்து பள்ளி மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து பள்ளி நிர்வாகம் சார்பில் சாரட் வண்டியில், பேண்ட் வாத்தியம் முழங்க ரயில் நிலையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் புதிய பேருந்து நிலையம் வழியாக சுமார் 3 கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து சென்றனர்.


தொடரும் ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தல்..ஒரே மாதத்தில் 14 கிலோ- ரூ. 14 கோடி.. அதிரும் சென்னை..





குவியும் வாழ்த்துக்கள் 


தொடர்ந்து குட் சமாரிட்டன் பப்ளிக் மேல்நிலைப்பள்ளி இயக்குனர் பிரவீன் மற்றும் முதல்வர் ஆபிரகாம் வெற்றி பெற்ற மாணவனுக்கு மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். இந்நிகழ்வில் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர். பின் செய்தியாளர்களிடம் பேசிய மாணவன் கூறுகையில், வெற்றி பெற உறுதுணையாக ஊக்கப்படுத்திய பெற்றோர் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு நன்றி தெரிவித்தார்.