2003-ம் ஆண்டு பாரீஸில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்று, பத்ம ஸ்ரீ, அர்ஜூனா விருதுகளை வென்ற அஞ்சு பாபி ஜார்ஜ், 2021 ஆண்டிற்கான ’சிறந்த பெண்மணி’ விருதால் கவுரவிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் தடகளம் என்றவுடன் நினைவுக்கு வரும் விளையாட்டு வீராங்கனைகளில் இவரும் ஒருவர். கேரளாவைச் சேர்ந்த அஞ்சு பாபி ஜார்ஜ், கடந்த 2016-ம் ஆண்டு பெண்களுக்கான தடகள பயிற்சி அகாடெமியை நிறுவினார். அந்த அகாடெமியில் இருந்து வந்த வீராங்கனை 20 வயதுக்குட்பட்டோருக்கான சர்வதேச தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்று அசத்தினார். தொடர்ந்து, பாலின சமத்துவத்திற்கு குரல் கொடுத்து வரும் அவர், பள்ளி மாணவிகளுக்கும் விளையாட்டு குறித்த உதவிகளையும், அறிவுரைகளையும் வழங்கி வருகிறார். இந்த காரணங்களுக்காக அவரது சேவையை பாராட்டி, உலக தடகள அமைப்பு அவருக்கு இந்த விருதை வழங்கி இருப்பதாக தெரிவித்திருக்கிறது.
வீடியோவை காண:
அஞ்சு பாபி ஜார்ஜ் நன்றி:
விருது பெற்றது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் பகிர்ந்த அஞ்சு, “இந்த விருது கிடைத்ததை நினைத்து மிகவும் பெருமை கொள்கிறேன். விளையாட்டு துறையில் இயங்கி வரும் நான் நாள்தோறும் இளம் வீராங்கனைகளைச் சந்தித்து அவர்களுடன் பேசுவதைவிட மகிழ்ச்சி வேறு எதுவும் இல்லை. அனைவருக்கும் நன்றி” என தெரிவித்திருக்கிறார்.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்