கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், அனைத்து  நாடுகள் மாற்றுத் திறனாளிகள் தினத்தை (டிசம்பர் 3) முன்னிட்டு மாவட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியினை  ஆட்சியர் பிரபுசங்கர் தொடங்கி வைத்தார்.




செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான போட்டிகளில் (ஆண், பெண்) 12 வயது முதல் 14 வயது உள்ளவர்களுக்கான 100மீ ஒட்டப்பந்தயம் மற்றும் நீளம் தாண்டுதல் போட்டிகளும், 15 வயது முதல் 17 வயது வரை உள்ளவர்களுக்கான 200மீ ஒட்டப்பந்தயம் மற்றும் குண்டு எறிதல் போட்டிகளும், 17 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான 400மீ ஒட்டப்பந்தயம் மற்றும் தொடர் ஒட்டப்பந்தயம் 4x400 மீ போட்டிகளும், பார்வைத்திறன் பாதிக்கப்பட்டோருக்கான விளையாட்டுப்  போட்டிகளில் 12 வயது முதல் 14 வயது உள்ளவர்களுக்கான நின்று நீளம் தாண்டுதல், குறைவாக பார்வைத்திறன் உள்ளவர்களுக்கு (ஆண்கள்)100மீ ஒட்டப்பந்தயம், ((பெண்கள்) 50மீ ஒட்டபந்தயமும், 15 வயது முதல் 17 வயது உள்ளவர்களுக்கான குண்டு எறிதல் , குறைவாக பார்வைத்திறன் உள்ளவர்களுக்கு (ஆண்கள் மற்றும் பெண்கள்)100மீ ஒட்டப்பந்தயம், 





16 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான வட்டு எறிதல் , குறைவாக பார்வைத்திறன் உள்ளவர்களுக்கு (ஆண்கள்)200மீ ஒட்டப்பந்தயம், (பெண்கள்) 100மீ ஒட்டபந்தயமும், 15 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் (சிறப்புப் பள்ளிகள்) ஆண்கள், பெண்கள், கல்லூரி மாணவர்களுக்கான குண்டு எறிதல் போட்டிகளும், பணியாளர்கள், சங்க உறுப்பினர்கள் (ஆண்கள்,பெண்கள்)100மீ ஒட்டப்பந்தயமும் நடைபெறுகிறது.


மேலும்,  கடுமையாக உடல் மற்றும் கால்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கான (நடக்கும் சக்தியற்றவர்களுக்கு) (உதவி உபகரணங்களின் உதவியுடன்) (ஆண், பெண்) 12 வயது முதல் 14 வயது உள்ளவர்களுக்கான 50மீ நடைப்பந்தயம், 15 வயது முதல் 17 வயது வரை உள்ளவர்களுக்கான மூன்று சக்கர வண்டி உதவியுடன் (ஆண்கள்) 150மீ ஒட்டப்பந்தயம், (பெண்கள்) 100மீ ஒட்டப்பந்தயம்,17 வயதிற்கு மேற்பட்டவர்கள் (ஆண்கள், பெண்கள்) சக்கர நாற்காலி உதவியுடன் 75மீ ஒட்டப்பந்தயம், கைகள் பாதிக்கப்பட்டோருக்கான விளையாட்டுப் போட்டிகளில் 12 வயது முதல் 14 வயது உள்ளவர்களுக்கான(ஆண், பெண்)  50மீ நடைப்பந்தயம், 15 வயது முதல் 17 வயது வரை உள்ளவர்களுக்கான 100 மீ ஒட்டப்பந்தயம் (ஆண்கள்), 75மீ ஒட்டப்பந்தயம்(பெண்கள்) , 17 வயதிற்கு மேற்பட்டவர்கள் (ஆண்கள்,) 200மீ ஒட்டப்பந்தயம், 100மீ ஒட்டப்பந்தயமும்(பெண்கள்), 




மனவளர்ச்சிக் குன்றியோருக்கான போட்டிகளில் 12 வயது முதல் 14 வயது உள்ளவர்களுக்கான(ஆண், பெண்) நின்று நீளம் தாண்டுதல், 15 வயது முதல்17 வயது உள்ளவர்களுக்கான(ஆண், பெண்)   ஓடி நீளம் தாண்டுதல், 17 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான (ஆண், பெண்)  100மீ நடைப்பந்தயம், ஸ்பாஸ்டிக் குழந்தைக்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் 12 வயது முதல் 14 வயது உள்ளவர்களுக்கான(ஆண், பெண்)  உருளைக்கிழங்கு சேகரித்தல், 15 வயது முதல் 17 வயது உள்ளவர்களுக்கான(ஆண், பெண்)  கிரிக்கெட் பந்து எறிதல், 17 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான (ஆண், பெண்) தடை தாண்டி ஓடுதல் போட்டிகளும் மற்றும் அனைத்து வகை மாற்றுத் திறனாளிக்களுக்கு பொதுவான போட்டி ஆண்களுக்கு 800மீ ஓட்டப்பந்தயமும், பெண்களுக்கு 400மீ ஒட்டப்பந்தயமும் போன்ற விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டிகளில் 300 மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டுள்ளார்கள்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் காமாட்சி, மாவட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா, தனித்துணை ஆட்சியர் சைபுதீன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.