சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடர் நேற்று தொடங்கியது. இந்தியா சார்பில் பி.வி.சிந்து, சாய்னா நேவால், ஸ்ரீகாந்த், மஞ்சுநாத், பிரணாய், அஷ்மிதா சாலிஹா, துருவ் கபிலா-அர்ஜூன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவர்களில்  பி.வி.சிந்து, சாய்னா நேவால் மற்றும் பிரணாய் ஆகியோர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். அதேபோல் ஆடவர் இரட்டையர் பிரிவில் அர்ஜூன் மற்றும் துருவ் கபிலா ஜோடி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியிருந்தது. 


 


இந்நிலையில் பி.வி.சிந்து காலிறுதிச் சுற்றில் ஹான் யூவை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் முதல் கேமை ஹான் யூ 21-17 என்ற கணக்கில் வென்றார். அடுத்து நடைபெற்ற இரண்டாவது கேமில் ஹான் யூவை பி.வி.சிந்து சிறப்பாக எதிர்கொண்டார். அந்த கேமை 21-11 என்ற கணக்கில் வென்றார். இரு வீராங்கனைகளும் தலா 1 கேமில் வெற்றி பெற்று இருந்ததால் மூன்றாவது கேம் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த கேமிலும் பி.வி.சிந்து அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 


 






மூன்றாவது கேமை பி.வி.சிந்து 21-19 என்ற கணக்கில் போராடி வென்றார். இறுதியில் 17-21,21-11,21-19 என்ற கணக்கில் பி.வி.சிந்து ஹான் யூவை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். பி.வி.சிந்துவை தொடர்ந்து சாய்னா நேவால் மற்றும் பிரணாய் ஆகியோர் இன்று காலிறுதிச் சுற்று போட்டியில் பங்கேற்க உள்ளனர்.


சாய்னா vs அயோ ஒஹாரி:


15 மாதங்களுக்கு பிறகு ஒரு சர்வதேச பேட்மிண்டன் தொடரில் சாய்னா நேவால் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஜப்பான் வீராங்கனை அயோ ஒஹாரி சர்வதேச தரவரிசையில் 30வது இடத்தில் உள்ளார். இவர் ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் தொடரில் 2வது சுற்றுடன் வெளியேறினார். இந்தோனேஷிய ஓபனில் இரண்டாவது சுற்றுடன் வெளியேறினார். ஆகவே இவரும் முதல் முறையாக இந்தாண்டு அரையிறுதிக்கு செல்ல வேண்டும் என்ற முனைப்புடன் இருப்பார். 


 


பிரணாய் vs நரோகா:


மலேசிய ஓபன் பேட்மிண் தொடரில் பிரணாய் காலிறுதி வரை முன்னேறினார். மலேசிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் இவர் அரையிறுதி வரை முன்னேறியிருந்தார். இந்தச் சூழலில் சிங்கப்பூர் ஓபனில் காலிறுதிக்கு பிரணாய் முன்னேறியுள்ளார். இவர் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நரோகாவை எதிர்த்து விளையாட உள்ளார். இந்தப் போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் இவர் அரையிறுதிக்கு முன்னேறி அசத்திவிடுவார். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண