பொருளாதாரம் சம்மந்தப்பட்ட துறைகளில் கடந்த ஆண்டை விட ஐந்து இடங்கள் முன்னேறிய போதிலும், பாலின சமத்துவத்தின் அடிப்படையில் இந்தியா 135 வது இடத்தில் உள்ளதாக கடந்த புதன்கிழமை வெளியான WEF அறிக்கை கூறி உள்ளது.


பாலின இடைவெளி அறிக்கை 2022


ஜெனீவாவில் வெளியிடப்பட்ட உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) வருடாந்திர பாலின இடைவெளி அறிக்கை 2022 இன் படி, ஐஸ்லாந்து உலகின் மிகவும் பாலின சமத்துவமிக்க நாடாக முதலிடத்தில் உள்ளது. அதனை தொடர்ந்து பின்லாந்து, நார்வே, நியூசிலாந்து மற்றும் ஸ்வீடன் தங்களது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளன. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், காங்கோ, ஈரான் மற்றும் சாட் ஆகிய நாடுகள் அடங்கிய 146 நாடுகளின் குறியீட்டில், இந்தியாவுக்குக் கீழே வெறும் 11 நாடுகள் மட்டுமே உள்ளன.



WEF எச்சரிக்கை


உலகளவில் வாழ்வாதாரத்திற்கான செலவு ஆகிய பிரச்சனைகள் மென்மேலும் இந்த பாலின சமத்துவத்தை சீர்குலைக்கும் என்றும் பாலின இடைவெளியை தீர்ப்பதற்கு இன்னும் 132 ஆண்டுகள் ஆகும் என்றும் WEF எச்சரித்துள்ளது. கொரோனா நோய் தொற்று பாலின சமத்துவத்தை ஒரு தலைமுறை பின்னுக்குத் தள்ளிவிட்டதாகவும், அதிலிருந்து மீள்வது முன்பைவிட மிகவும் கடினமான மாறியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


தொடர்புடைய செயதிகள்: Rasi Palan Today, 15 July 2022 : கன்னிக்கு நிம்மதி...! விருச்சிகத்துக்கு அலைச்சல்..! அப்போ உங்க ராசிக்கு எப்படி..?


இந்தியாவில் பெண்கள் நிலை


2021 ஆம் ஆண்டிலிருந்து மீண்டு வரும் இந்தியா, பொருளாதார பங்கேற்பு மற்றும் பொருளாதார வாய்ப்பு ஆகியவற்றில் அதன் செயல்திறனில் ஓரளவுக்கு நல்ல மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. ஆனால், 2021 முதல் தொழிலாளர் பங்கேற்பில் ஆண்களையும் பெண்களையும் ஒப்பிடுகையில் அதன் இடைவெளி அதிகரித்து உள்ளது. பெண் சட்டமன்ற உறுப்பினர்கள், மூத்த அதிகாரிகள் மற்றும் மேலாளர்களின் பங்கேற்பு 14.6 சதவீதத்தில் இருந்து 17.6 சதவீதமாக அதிகரித்துள்ளது, மேலும் தொழில்முறை மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களாக பெண்களின் பங்கு 29.2 சதவீதத்தில் இருந்து வளர்ந்து 32.9 சதவீதமாக உள்ளது. 



தெற்காசியாவின் நிலை


இருப்பினும், ஆரம்பக் கல்வி சேர்க்கை மற்றும் மூன்றாம் நிலைக் கல்வி சேர்க்கைக்கான பாலின சமத்துவத்தின் அடிப்படையில் இந்தியா உலக முன்னிலை வகிக்கிறது. தெற்காசியாவிற்குள், பங்களாதேஷ், நேபாளம், இலங்கை, மாலத்தீவுகள் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளுக்கு பின்னாக 6 வது இடம் பிடித்துள்ளது. ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் இந்தியாவை விட மோசமான நிலையில் உள்ளன. தெற்காசியா (62.3 சதவீதம்) அனைத்து பிராந்தியங்களிலும் மிகப்பெரிய பாலின இடைவெளியைக் கொண்டுள்ளது, அளவிடப்பட்ட அனைத்து பாலின இடைவெளிகளிலும் குறைந்த மதிப்பெண்கள் கொண்டுள்ள பகுதியாக தெற்கு ஆசியா உள்ளது. இந்த நிலை மாற இன்னும் 192 வருடங்கள் எடுக்கும் என்று யூகிக்கப் பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.