கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கிய ஐசிசி உலகக் கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது.


அதன்படி, ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த அரையிறுதி போட்டி இன்று (நவம்பர் 15) நடைபெற்று வருகிறது. மும்பை வான்கடே மைதனாத்தில் நடைபெறும் இந்த போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இதில் சுப்மன் கில்(Shubman Gill) அதிரடியாக அரைசதம் அடித்தார்.


டாஸ் வென்ற இந்தியா:


கடந்த 1983, 1987, 1996, 2003, 2011, 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதி போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில், 1983, 2003 மற்றும் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கிறது.  இச்சூழலில், இன்று நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 


அதன்படி, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினார்கள்.


இதில், 3 ரன்கள் எடுத்தால் அரைசதம் என்ற நிலையில் களத்தில் நின்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா  47 ரன்களில் ஆட்டமிழந்தார். மொத்தம் 29 பந்துகள் களத்தில் நின்ற அவர் 4 சிக்ஸர்களையும், 4 பவுண்டரிகளையும் பறக்க விட்டார். இதனிடையே அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா நியூசிலாந்து அணி வீரர் டிம் சவுத்தி பந்தில் 8. 2 ஓவர் முடிவில் விக்கெட்டை பறிகொடித்தார்.


அதிரடி அரைசதம் அடித்த சுப்மன் கில்:


மறுபுறும் களத்தில் நின்ற சுப்மன் கில் அதிரடியாக விளையாடினார். அதன்படி, 41 வது பந்தில் அரைசதம் அடித்தார் சுப்மன் கில். 23 வயதே ஆன சுப்மன் கில் அவர் விளையாடிய முதல் உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி போட்டியில் அரைசதம் அடித்து ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளார்.


தொடர்ந்து சுப்மன் கில்லுக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் அவர் ரிட்டையர் ஹட் முறையில் வெளியேறினார். 




முன்னதாக கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 55 பந்துகளில் 53 ரன்கள் எடுத்திருந்தார். அதேபோல், கடந்த நவம்பர் 2 ஆம் தேதி இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற 33 வது லீக் போட்டியில் 92 பந்துகள் களத்தில் நின்ற சுப்மன் கில் 11 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என மொத்தம் 92 ரன்களை குவித்தார். மேலும், நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 32 பந்துகளில் 51 ரன்களை குவித்தார் சுப்மன். 


இச்சூழலில், சுப்மன் கில் இந்த உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 4 அரைசதங்கள் அடித்து தற்போது சதம் அடிக்கும் நோக்கில் விராட் கோலியுடன் இணைந்து விளையாடி வருகிறார். அதன்படி, 54 பந்துகளில் 66* ரன்கள் அடித்து களத்தில் நிற்கிறார் சுப்மன் கில்.


 


மேலும் படிக்க: World Cup 2023: அரையிறுதி, இறுதி போட்டியில் மழை வந்தால் ரிசர்வ் நாள்.. அதிலும் மழை வந்தால்..? விதிகளை வெளியிட்ட ஐசிசி..!


 


மேலும் படிக்க: Abdul Razzaq: ”வாய் தவறி பேசிட்டேன், மன்னிச்சிருங்க” - ஐஸ்வர்யா ராயிடம் மன்னிப்பு கேட்ட பாகிஸ்தான் முன்னாள் வீரர் அப்துல் ரசாக்