இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்:


இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறதுஅதன்படிமுதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணிஇரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது.


இதனிடையே, இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வருகின்ற பிப்ரவரி 15 ஆம் தேதியும்நான்காவது டெஸ்ட் வருகின்ற பிப்ரவரி 23 அன்று ராஞ்சியிலும் நடைபெறவுள்ளது. அதேபோல், தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் மார்ச் 7ம் தேதி தரம்ஷாலாவில் தொடங்குகிறதுஇச்சூழலில், கடைசி மூன்று தொடருக்கான இந்திய அணியை நேற்று பிசிசிஐ அறிவித்தது. இதில், நட்சத்திர பேட்ஸ்மேனும், முன்னாள் இந்திய அணியின் கேப்டனுமான விராட் கோலி கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் தனிப்பட்ட காரணங்களால் விளையாடவில்லை. முதல் இரண்டு டெஸ்டில் கூட விராட் கோலி விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம், ஷ்ரேயாஸ் ஐயர் மூன்று டெஸ்டில் அணியில் இடம்பெற மாட்டார் எனவும், முழு தொடரிலிருந்தும் வெளியேறியதாகவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. 


ஷ்ரேயாஸ் ஐயருக்கு இடமில்லை:


இதில் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயர் இடம்பெறாதது ரசிகர்களிடம் கேள்வியை எழுப்பியுள்ளது. இதனிடையே அவர் பார்ம் அவுட் காரணமாக அணியில் இருந்து வெளியேற்றப்பட்டாரா அல்லது காயம் காரணமாக வெளியேறினாரா என்பது பற்றியும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் ஷ்ரேயாஸ் ஐயர்  இங்கிலாந்து அணிக்கெதிரான கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளில் தேர்வு செய்யப்படாததற்கு என்ன காரணம்? என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.


வெளியான தகவல்:


அந்த வகையில் ஏற்கனவே ஷ்ரேயாஸ் ஐயருக்கு வலைப்பயிற்சியின்போது பேட்டிங் செய்கையில் முதுகுப்பகுதியில் வலி இருந்ததாகவும் அதேபோல் தசைப்பிடிப்பு  இருந்ததாகவும் கூறப்பட்டது. எனவே மற்ற இந்திய வீரர்களின் கிட் பேக் விசாகப்பட்டினம் நகரில் இருந்து ராஜ்கோட் வந்தடைந்த சூழலில் ஷ்ரேயாஸ் ஐயரின் கிட் பேக் மட்டும் மும்பைக்கு அனுப்பப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் காயம் காரணமாகவே ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.


மேலும் படிக்க: Virat Kohli: தனிப்பட்ட காரணம்.. இங்கிலாந்து தொடரில் இருந்து முழுமையாக விலகிய விராட் கோலி - இந்திய அணி அறிவிப்பு!


 


மேலும் படிக்க: IPL 2024: ஷமர் ஜோசப்பிற்கு அடித்த ஜாக்பாட்! ஐ.பி.எல்.லில் களமிறங்கும் கரிபீயன் புயல் - யாருக்காக?