கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் அவரது மனைவி அஞ்சலி டெண்டுல்கர் ஆகியோருக்கு இரண்டு குழந்தைகள் ஆகும்.  மகள் சாரா டெண்டுல்கர், பாலிவுட் ஹீரோயின்கள் போன்ற தோற்றம் மற்றும் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் மாஸ்டர் பிளாஸ்டரின் கிரிக்கெட் வாரிசாக உருவாகிக் கொண்டிருக்கிறார். சாரா டெண்டுல்கர் தனது சிறு வயது முதலே மிகவும் பிரபலம். தற்போது ஒரு ஃபேஷன் ஐகானாக மாறியுள்ளார். 
சாரா பெயர் காரணம்

சாரா டெண்டுல்கர் 1997ம் ஆண்டு  அக்டோபர் மாதம் 12ம் தேதி மும்பையில் பிறந்தார். தனது தாய் அஞ்சலியின் அழகும் நேர்த்தியும் சாராவிடம் தெளிவாக தெரிகிறது. சச்சின் டெண்டுல்கர் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடிய போது "சஹாரா கோப்பை” வென்றதால் அவரது மகளுக்கு சாரா என பெயர் சூட்டியதாக கூறப்படுகிறது.





சாராவின் படிப்பு

திருபாய் அம்பானி சர்வதேச பள்ளி, மும்பையில் தனது பள்ளி படிப்பை முடித்த பிறகு லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் மருத்துவ பட்டம் பெற்றார். ஒரு புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தின் மருத்துவ பட்டதாரிக்கு ஃபேஷன் மீதும் ஆர்வம் இருந்தது. Ajio Luxe விளம்பரத்தின் மூலம் ஃபேஷன் மாடலாக அறிமுகமானார். ஃபேஷன் ஆடை பிராண்டான அஜியோவின் விளம்பரத்தில் தோன்றியுள்ளார் சாரா.


தந்தை - மகள் உறவு 

சாரா மற்றும் சச்சின் டெண்டுல்கரின் தந்தை - மகளுக்குமான உறவு மிகவும் நெருக்கமானது. தந்தையுடன் எடுத்து கொண்ட ஏராளமான புகைப்படங்களை அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து கொள்வார் சாரா. மேலும் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான சச்சின்: எ பில்லியன் ட்ரீம்ஸ் திரைப்படம் 2017ம் ஆண்டு வெளியானது. அந்த படத்தின் பிரீமியரின் போது சாரா தனது தந்தை குறித்து உணர்ச்சிகரமான உரையை நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.  



 


சாராவின் திரையுலக அறிமுகம்

சாரா டெண்டுல்கர் கூடிய விரைவில் பாலிவுட்டில் ஷாஹித் கபூருக்கு ஜோடியாக அறிமுகமாக உள்ளார் என பல வதந்திகள் பரவின. அதற்கு எல்லாம் முட்டுக்கட்டை வைப்பது போல் அவரது தந்தை சச்சின் டெண்டுல்கர் பேட்டி ஒன்றில் இவை அனைத்தும் வதந்தி என்றும் சாரா ஹிந்தி திரையுலகில் நுழையும் விருப்பம் ஏதும் இல்லை என்ற தெளிவான பதிலால் வதந்தி கலைக்கப்பட்டது.    





சாராவின் டேட்டிங்

சாரா டெண்டுல்கர் சாரா ஆனந்த் அம்பானிக்கும் இடையில் உறவுமுறை இருப்பதாக சில வதந்திகள் பரவி வந்தன. மேலும் அவர் இளம் கிரிக்கெட் வீரர் சுப்மான் கில்லுடன் டேட்டிங் செய்து வருவதாகவும் வதந்திகள் பரவின. இருப்பினும் இது வரையில் சாரா அல்லது சுப்மான் தரப்பில் இருந்து எந்த ஒரு தகவலும் வெளி வரவில்லை.


சாராவின் பொழுதுபோக்கு 

பாலிவுட் நடிகர் ரன்வீர்சிங் உடைய மிகப்பெரிய ரசிகை சாரா. மேலும் சாரா பெரும்பாலான நேரத்தை தனது தாய்வழி பாட்டி அன்னாபெல் மேத்தாவுடன் தான் செலவிடுவாராம். இசை கேட்கவும், படிக்கவும், படங்கள் பார்க்கவும் சாராவிற்கு மிகவும் பிடிக்குமாம். அப்னா லீ மும்பை மாரத்தான் மும்பையில் மிகவும் பிரபலம். இந்த போட்டிக்காக நிதி திரட்டப்படும். 2013ம் ஆண்டு நடைபெற்ற அப்னா லீ மும்பை மாரத்தான் போட்டிக்காக இளம் வயதிலேயே நிதி திரட்டியுள்ளார்  சாரா.