இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித்சர்மா. கடந்தாண்டு விராட்கோலி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய பிறகு டி20, ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கு கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித்சர்மா நடப்பாண்டு முதல் மூன்று வடிவ போட்டிகளுக்கும் கேப்டனாக பொறுப்பு வகித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் எப்போதும் பரபரப்பாக இயங்கும் ரோகித்சர்மாவின் டுவிட்டர் பக்கத்தை இன்று மர்மநபர்கள் ஹேக் செய்துள்ளனர். திடீரென இன்று காலை ரோகித்சர்மாவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், “ நான் டாஸ் போடும் நாணயங்களை விரும்புகிறேன். குறிப்பாக அது எனது தொப்பையில் முடிவடையும்போது” என்று பதிவிடப்பட்டது.
இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர், மதியம் 2 மணியளவில் “ உங்களுக்கு தெரியுமா? சலசலக்கும் தேனீக்கள் சிறந்த குத்துச்சண்டை பைகளை உருவாக்குகின்றன” என்று பதிவிட்ப்பட்டுள்ளது.
பின்னர், மாலை 4 மணயளவில் “கிரிக்கெட் பந்துகள் சாப்பிடக்கூடியவை. சரிதானே?” என்று பதிவிடப்பட்டுள்ளது.
இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் கேப்டன் ஆர் யூ ஓகே? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதைத்தொடர்ந்துதான், ரோகித்சர்மாவின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது அனைவருக்கும் தெரியவந்தது. இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றது முதல் டி20 போட்டிகளிலும், ஒருநாள் போட்டிகளிலும் தொடர் வெற்றியை பெற்று வரும் ரோகிதத்சர்மாவின் டுவிட்டர் பக்கம் முடக்கப்பட்டுது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்