‘வைகைப் புயல் வடிவேலு’, இந்தப் பேரை கேட்டாலே சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சி அடைவார்கள். வடிவேலுவின் காமெடிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் சினிமாவில் இருந்து சில வருடங்கள் விலகியிருந்தாலும், அவரின் பழைய காமெடிகளை பார்த்து வயிறு வலிக்க சிரிப்பவர்களை நாம் காணலாம். காரணம், அந்தளவிற்கு அவரின் காமெடிகள் இருக்கும். தன்னையே மட்டம்படுத்தி அதன்மூலம் நகைச்சுவை மன்னனாக மக்களின் மனதில் இடம்பிடித்தவர்.


வடிவேலுவை வெறும் காமெடி நடிகராக மட்டும் பார்க்க முடியாது. அவர் ஒரு பன்முக கலைஞர். வடிவேலு என்ற காமெடி நடிகனை,  மகா நடிகனாக்க்க தமிழ் சினிமா தவறிவிட்டது என்று உலக நாயகன் கமல்ஹாசனும் கூறியுள்ளார். கமலின்  ‘தேவர் மகன்’ படத்தில் வடிவேலுவை காமெடினாக மட்டும் காட்டாமல், சிறந்த நடிகராகவும் காட்டியிருப்பார் கமல்ஹாசன். அந்தப் படத்திற்கு பிறகு வடிவேலுக்கு அந்த மாதிரி கதாப்பாத்திரம் அமையவில்லை என்பது துரதிருஷ்டமானது.


வடிவேலுவின் பாடிலாங்வேஜ் மற்றும் மைண்ட் வாயிஸ் தான், அவரது காமெடி காட்சிகளுக்கு பிளஸ். வசனம் இல்லாமல் தன்னுடைய  பாடிலாங்வேஜ்  மூலம் சிரிக்க வைக்கும் திறமை சார்லி சாப்ளின் உள்ளிட்ட ஒரு சில நடிகர்களுக்கே மட்டுமே இருக்கும். அந்தத் திறமை நம் தமிழ்நாட்டை சேர்ந்த வடிவேலுக்கு இருப்பது தமிழ் சினிமா செய்த புண்ணியம் என்றும் கூறலாம்.


இதைத் தவிர, ஷூட்டிங் ஸ்பாட் மற்றும் டப்பிங்கில் வடிவேலு செய்யும் மேஜிங் அனைவரையும்  மிரள வைக்கும். இதை அவருடன் பணிபுரிந்த நடிகர்கள், டெக்னீஷியங்கள் கூறியுள்ளனர்.


ஷுட்டிங்கில் நார்மலாக வசனம் பேசி நடித்து விட்டு, டப்பிங்கில் மாத்தும் வித்தகர் என்று இயக்குநர் வெற்றிமாறன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். சினிமாவில் மேஜிக் போன்ற நிகழ்வுகள் எல்லாம் டப்பிங்கில் நடந்தேறியுள்ளதாக அவர் கூறினார். ‘தலைநகரம்’ திரைப்படத்தில் ‘ஏஏஏ நான் ஜெயிலுக்கு போறேன்...ஜெயிலுக்கு போறேன். நானும் பெரிய ரவுடிதான்’ என்று வடிவேலு  வசனம் பேசியிருப்பார். இந்த வசனத்தை டப்பிங்கில்தான் வடிவேலும் பேசினார் என்று வெற்றிமாறன் கூறினார். அந்தக் காட்சியை சவுண்ட் இல்லாமல் பார்க்கும் போது, ‘ஏ கட் பண்ணுங்கடா கட்  பண்ணுங்கடா  டப்பிங்கிள் பாத்துக்கலாம்’ என்று பேசியிருப்பார் என்று வெற்றிமாறன் கூறியது வடிவேலு மாபெரும் கலைஞன் என்று தெம்புடன் கூறிக்கொள்ளலாம் கோலிவுட் காரர்கள். இதனை பார்க்கும் ரசிகர்கள் வடிவேலு ஒரு லெஜெண்ட் என்று பெருமையுடன் கூறுகின்றனர். 


வீடியோ:






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண