இந்திய டென்னிஸ் நட்சத்திர வீரர் ரோகன் போபண்ணா புதிய வரலாறு படைத்துள்ளார். ரோகன் போபண்ணா மற்றும் மேட் எப்டன் ஆகியோர் ஆகியோர் ஆஸ்திரேலிய ஓபனில் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளனர்.
43 வயதான ரோகன் போபண்ணா மற்றும் அவரது ஜோடியான மேட் எப்டன், காலிறுதி ஆட்டத்தில் 6-4, 7-6 (7-5) என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினர். அதே நேரத்தில், இந்த வெற்றிக்குப் பிறகு, ஆடவர் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா மற்றும் மேட் எப்டன் ஜோடி உலகின் நம்பர்-1 இடத்தை பிடித்து அசத்தியது.
காலிறுதி ஆட்டம்:
ஆஸ்திரேலிய ஓபன் காலிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினாவின் மாக்சிமோ கோன்சலஸ் மற்றும் ஆண்ட்ரஸ் மோல்டெனி ஜோடியானது ரோகன் போபண்ணா மற்றும் மேட் எப்டன் ஜோடியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் முழுக்க முழுக்க ரோகன் போபண்ணா, மேட் எப்டன் ஜோடி எதிரணி வீரர்களுக்கு எதிராக தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தினர். இதனால், எதிரணி வீரர்களால் ஒரு செட்டை கூட தனதாக்க முடியவில்லை. இதையடுத்து, மாக்சிமோ கோன்சாலஸ் மற்றும் ஆண்ட்ரெஸ் மோல்டெனி ஜோடி 6-4, 7-6 (7-5) என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
இதன் மூலம் ரோகன் போபண்ணா மற்றும் மேட் எப்டன் ஆஸ்திரேலிய ஓபன் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். மேலும், ஆடவர் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா மற்றும் மேட் எப்டன் ஜோடி உலக தரவரிசையில் முதலிடத்தை எட்டியுள்ளது.
முன்னதாக, கடந்த வார தொடக்கத்தில் மெல்போர்னில் நடந்த இரண்டாவது சுற்றில் செக் குடியரசு-சீனா ஜோடியையும், மூன்றாவது சுற்றில் அமெரிக்க ஓபன் சாம்பியன்களான ராஜீவ் ராம் மற்றும் ஜோ சாலிஸ்பரியை தோற்கடித்தது. தொடர்ந்து, ரோகன் போபண்ணா மற்றும் அவரது ஜோடி ஆஸ்திரேலியாவின் மேட் எப்டன் ஜோடி நெதர்லாந்தின் வெஸ்லி கூல்ஹோஃப் மற்றும் குரோஷியாவின் நிகோலா மெக்டிக் ஜோடியை நேர் செட்களில் தோற்கடித்தது. இரண்டாவது தரவரிசையில் இருந்த இந்தியாவின் ரோகன் போபண்ணா மற்றும் ஆஸ்திரேலியாவின் மேட் எப்டன் ஜோடி 7-6, 7-6 என்ற கணக்கில் உலகின் முன்னாள் நம்பர் ஒன் ஜோடியான கூல்ஹாஃப் மற்றும் மெக்டிக் ஜோடிக்கு எதிராக வெற்றி பெற்றது.
தற்போது, காலிறுதி ஆட்டத்தில் ரோகன் போபண்ணா மற்றும் மேட் எப்டன் ஜோடி 6-4, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் அர்ஜென்டினாவின் மாக்சிமோ கோன்சாலஸ் மற்றும் ஆண்ட்ரஸ் மோல்டெனி ஜோடியை வீழ்த்தியது. இதையடுத்து அடுத்ததாக, போபண்ணா மற்றும் எப்டன் ஜோடி அரையிறுதியில் தரவரிசையில் இல்லாத தாமஸ் மச்சக் மற்றும் ஜிசென் ஜாங் ஆகியோரை எதிர்கொள்கின்றனர்.
2008ல் முதன்முறையாக ஆண்கள் இரட்டையர் பிரிவில் அடியெடுத்து வைத்தார் போபண்ணா. இதுவரை ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் போபண்ணா சிறப்பால செயல்பட்டும், மூன்றாவது சுற்றுக்கு மேல் அவரால் முன்னேற முடியவில்லை. தற்போது, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிக்கு முதல்முறையாக போபண்ணா முன்னேறியுள்ளார்.
பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்றுள்ளார் போபண்ணா
2017ல் கலப்பு இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்றுள்ளார். பிரெஞ்ச் ஓபனில் ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் போபண்ணாவின் சிறந்த ஆட்டம் 2022ஆம் ஆண்டு அரையிறுதிக்கு முன்னேறியதுதான். அதேபோல், 2013, 2015 மற்றும் 2023ல் விம்பிள்டனில் அரையிறுதிக்கு முன்னேறினார்.