உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர், கடந்த சில ஆண்டுகளாக காயங்கள் மற்றும் அறுவை சிகிச்சைகளால் பாதிக்கப்பட்டு வந்தார். இந்நிலையில், 41 வயதான ஜோரர் பெடரர் தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அடுத்த வாரம் லண்டனில் தொடங்கவுள்ள லவர் கோப்பை தொடருடன் ஓய்வு பெறவிருப்பதாக அறிவித்துள்ளார். இது உலகம் முழுவதும் உள்ள இவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சுவஸர்லாந்தில் 1981 ஆகஸ்ட் 8ம் தேதி பிறந்த ரோஜர் பெடரர், 1998ல் தனது டென்னிஸ் வாழ்க்கையை தொடங்கினார். தனது முதல் ஆட்டத்தில் 1998ல் சுவஸர்லாந்து ஓபன் டென்னிஸ் போட்டியில், லூக்கஸ் அர்னால்ட் கெர் என்பவரிடம் தோற்றுப்போனார். அவரின் முதல் தோல்வி அவருக்கே பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுருக்கும், ஆனால் அதிலிருந்து தாமாகவே வெளிவந்து கடந்த 24 ஆண்டுகாளாக ஒட்டு மொத்த டென்னிஸ் சாம்ராஜ்ஜியத்தையே கட்டி ஆண்டவர் இன்று தனது ஓய்வை அறிவித்திருகிறார்.
தான் கத்துக் குட்டியாக இருந்த காலத்தில் இருந்த ஜாம்வான்காளையெல்லாம், ஒரு கை பார்த்து தனது அனுபவத்தாலும், சிறப்பம்சம் கொண்ட தனது ஆட்டத்தாலும் டென்னிஸ் உலகில் நிலைத்து நின்றார். ஒரு சுவஸர்லாந்து நாட்டுக்காரன் என்ன செய்து விடுவான் என எண்ணியவர்களுக்கு சூராவளியாக மாறி தனது பதிலடியை, தனது எதிராளிகளுக்கு வடு ஏற்படுத்தியவர். சர்வதேச டென்னிஸில் தான் அறிமுகமான ஆண்டே, ஒற்றையர் பிரிவில் ஜூனியர் விம்பிள்டன் தொடரில் வென்று டென்னிஸ் உலகையே தனது பக்கம் திருப்பினார். அதேபோல் இரட்டையர் பிரிவிலும் வென்று அசத்தினார். அதைத்தொடர்ந்து, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரை, 2004, 2006, 2007, 2010, 2017, 2018 ஆகிய ஆண்டுகளில் வென்று மொத்தம் ஏழு ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தினை வென்று அசத்தினார். மேலும், 2009 ஆம் ஆண்டில் ஃப்ரென்ச் ஓபன் டென்னிஸ் டைட்டிலையும் வென்றுள்ளார். விம்பிள்டன் நாயகன் என்று அழைக்கப்படும் பெடரர் 2003, 2004, 2005, 2006, 2007, 2009, 2012, 2017 ஆகிய ஆண்டுகளில் விம்பிள்டன் பதக்கத்தினை வென்று மொத்தம் எட்டு முறை விம்பிள்டன் பதக்கம் வென்ற வரலாற்று சிறப்பை பெற்றுள்ளார்.
இது இல்லாமல், அமெரிக்க ஓபன் டென்னிஸில் 2004, 2005, 2006, 2007, 2008 ஆகிய ஆண்டுகளில் வென்றும் சாதனை படைத்துள்ளார். மொத்தம் 20 ஓபன் டென்னிஸ் தொடர்களை வென்றுள்ள பெடரர் இதுவரை 1,500க்கும் மேலான டென்னிஸ் போட்டிகளில் விளையாடியுள்ளார். தனது ஓய்வை அறிவித்துள்ள ரோஜர் பெடரர், டென்னிஸில் இருந்து தான் விலகுகிறேன், ரசிகர்களாகிய உங்களிடமிருந்து விலவில்லை என உருக்கமாக குறிப்பிட்டிருப்பது உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களை பெரும் நெகிழ்ச்சிக்குள் ஆழ்த்தியுள்ளது. அடுத்த வாரத்தில் லவர் கோப்பை தொடர் தான் அவர் பங்கேற்கவிருக்கும் கடைசி போட்டித் தொடர் என்பதால் அவரது ரசிகர்கள் மத்தியில் மிகவும் ஆவலை ஏற்படுத்தியுள்ள போட்டித் தொடராகவே மாறியுள்ளது. இவரது ஆட்டத்தைக் காண உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் திரளாக பங்கேற்பார்கள் என்பதால் போட்டித் தொடருக்கான ஏற்பாடுகள் வழக்கத்தைவிடவும் மும்முரமாக நடந்து வருகின்றன.