சென்னையின் பல்வேறு முக்கிய பகுதிகளில் மெட்ரோ பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சென்னையில் நாளை முதல் பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. இதுதொடர்பாக, சென்னை மாநகர காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,


“ 100 அடி சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையாக உள்ளதால், போக்குவரத்தை மேம்படுத்தும் பொருட்டு நாளை முதல் 10 நாட்கள் சோதனை ஓட்டமாக கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட உள்ளது.



  • கோயம்பேடு முதல் வடபழனி வரை உள்ள விநாயகபுரம் சந்திப்பு, பெரியார் பாதை சந்திப்பு மற்றும் நெற்குன்றம் பாதை சந்திப்பு ஆகிய 3 இடங்களில் உள்ள மைய தடுப்புச்சுவர் மூடப்படும். இதற்கு பதிலாக, ஏற்கனவே உள்ள செப் கேம் வில்லேஜ் சந்திப்பு, வடபழனி பாலத்தின் கீழ் ஆகிய 2 யு டர்னில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்.

  • விநாயகபுரம் சந்திப்புக்கும், பெரியார் பாதை சந்திப்புக்கும் இடையே அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் உள்ள தூண் எல்லாம் 110 மற்றும் 111 இடையே யு டர்ன் உருவாக்கப்பட்டுள்ளது.

  • பெரியார் பாதைக்கும், நெற்குன்றம் பாதைக்கும் இடையில் தூண் எண்கள் 126 மற்றும் 127 இடையில் யு டர்ன் உருவாக்கப்பட்டுள்ளது.





  • வடபழனியில் இருந்து கோயம்பேடு செல்லும் வாகனங்கள் நெற்குன்றம் சந்திப்பில் வலதுபுறம் திரும்ப விரும்புபவர்களம் நேராக சென்று 170 மீட்டர் தூரத்தில் தூண் எண் 126 மற்றும் 127 இடையே புதியதாக அமைந்துள்ள யு டர்னில் திரும்பி செல்லலாம்.

  • வடபழனியில் இருந்து கோயம்பேடு செல்லும் வழியில் பெரியார்பாதை சந்திப்பில் வலதுபக்கம் செல்லும் வாகனங்கள் கோயம்பேடு திசையில் 238 மீட்டரில் அரும்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் தூண் எண்கள் 110 மற்றும் 111 இடையில் புதிதாக அமைந்துள்ள யு டர்னில் திரும்பிக் கொள்ளலாம்.

  • பெரியார் சந்திப்பு மூடப்படுவதால் பெரியார் பாதையின் உள்இருந்து வரும் வாகனங்கள் இடதுபுறம் திரும்பி செல்லவும் மற்றும் கோயம்பேட்டில் இருந்து வரும் வாகனங்கள் பெரியார் பாதைக்கும், நெற்குன்றம் பாதைக்கும் இடையில் 240 மீட்டர் தொலைவில் தூண் எண்கள் 126 மற்றும் 127 இடையில் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள யு டர்னில் திரும்பிச் செல்லலாம்.





  • கோயம்பேட்டில் இருந்து வரும் வாகனங்கள் நெற்குன்றம் சந்திப்பில் வலதுபுறம் திரும்பும் வாகனங்கள் நேராக வடபழனி சர்வீஸ் ரோடு பாலத்தின் கீழ் யு டர்ன் எடுத்து திரும்பிச் செல்லலாம்.


இந்த மாற்றங்கள் தொடர்பான சந்தேகங்களுக்கு  பொதுமக்கள், வாகன ஓட்டிகள் 044-23452362, 42042300 என்ற எண்ணிலும் தொடரபு கொள்ளலாம்.”


இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.